தினமணி கொண்டாட்டம்

தெரியுமா?

DIN

மாற்றத்தால் வந்த அதிர்ஷ்டம்!

எல்.வி. பிரசாத் இயக்கிய ஒரு படத்துக்கு இரண்டாம் கதாநாயகி வேடம் தரப்பட, வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்டார் சாவித்திரி. அப்பொழுது முதல் கதாநாயகியால் சாவித்திரிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. முதல் இருநாள்கள் படப்பிடிப்பிலேயே இயக்குநருக்கும் முதல் கதாநாயகிக்கும் மோதல் ஏற்பட, படம் பாதியில் நின்றது. இயக்குநர் ஒரே முடிவாக இரண்டாவது கதாநாயகியை முதல் நாயகி ஆக்கினார். "என்னங்க இப்படி பண்ணிட்டீங்க? யோசிச்சி முடிவெடுத்திருக்கலாம்' என இயக்குநருக்கு தூபம் போட்டனர் உடனிருந்தவர்கள். தனது முடிவில் எல்.வி. பிரசாத் உறுதியாக இருந்தார். 

படம் வெளியான போது சாவித்திரிக்கு அமோக வரவேற்பு. எல்.வி. பிரசாத் முதல் நடிகையிடமிருந்து எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான நடிப்பை திரையில் தெறிக்கவிட்டிருந்தார் சாவித்திரி. "மிஸ்ஸியம்மா'  என்ற அத்திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழாக் கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போனார் சாவித்திரி.  

எம்.எஸ்.ஸின் கையெழுத்தை பச்சை குத்திக் கொண்ட இளைஞர்


21 வயதாகும் சசிகுமார் பெங்களூரைச் சேர்ந்தவர். 10 வயதாக இருக்கும் போது மல்லேஸ்வரத்தில் ஒரு கோயிலுக்குச் சென்றார். அங்கு எம்.எஸ். சுப்புலட்சுமியின் புகைப்படத்தைப் பார்த்தார். உடனே அவருக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி மீது அபிமானம் ஏற்பட்டது. 

முதலில் அவருடைய வாழ்க்கையைப் பற்றி வந்துள்ள தகவல்களைப் படித்தார். அடுத்து எம்.எஸ்.ஸின் பேத்திகள் எஸ். ஐஸ்வர்யா மற்றும் எஸ். சௌந்தர்யா பெங்களூருக்கு கச்சேரி செய்ய வரும் போதெல்லாம் அது பற்றி அறிந்து நிகழ்ச்சிகளில் பார்வையாளராகக் கலந்து கொண்டார்.

 ஒரு கட்டத்தில் எம்.எஸ்.ஸின் கையெழுத்தை, தன் கையில் பச்சை குத்திக் கொள்ள விரும்பினார். இதற்காக சென்னையில் அவருக்கு தெரிந்த குடும்பத்தினரிடம் உதவி கேட்டார். அவர்களும் பெரு முயற்சி செய்து சசிகுமாருக்கு எம்.எஸ்.ஸின் கையெழுத்தை அனுப்பி வைத்தனர்.  இருந்தாலும் "அது உண்மையான கையெழுத்துதானா...?' என அறிய எம்.எஸ்.சுப்புலட்சுமி குடும்பத்தினரிடமே தொடர்பு கொண்டார். அவர்களும் சோதித்து, "அது உண்மையான கையெழுத்துதான்!' என கூற, உடனே அந்தக் கையெழுத்தை, சமீபத்தில் தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டு விட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT