தினமணி கொண்டாட்டம்

வசந்த முல்லை

22nd Nov 2020 06:00 AM

ADVERTISEMENT


எஸ்.ஆர்.டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்து வரும் படத்துக்கு "வசந்த முல்லை' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. இதில் சிம்ஹாவுக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இது இரண்டாவது படம். கடந்த 2019-இல் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்த "சிவப்பு மஞ்சள் பச்சை' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவரின் தாய்மொழி மராத்தியாக இருந்தாலும் குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழி படங்களில் நடித்துள்ளதைப்பெருமையாகக் கருதுகிறார்.

"வசந்த முல்லை'யில் முக்கியக் கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில்தொடங்கவுள்ளது.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT