தினமணி கதிர்

திரைக்  கதிர்

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது விஷ்ணு விஷால், விக்ராந்த்தை வைத்து கிரிக்கெட் தொடர்பான படம் ஒன்றை இயக்கி வருகிறார். படத்தின் பெயர் "லால் சலாம்'. இதில் கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் "ஜெயிலர்' படப்பிடிப்பில் இருந்த ரஜினி, "ஜெயிலர்' தோற்றத்தில் இருந்து வெளிவந்ததும், "லால் சலாம்' படத்திற்காக தேதிகளைக் கொடுத்தார். அதில் அவர் இஸ்லாமியராகவும், அவரது கேரக்டருக்கு மொய்தீன் பாய் என்றும் அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.  கிரிக்கெட் தொடர்பான கதை என்பதால், வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரஜினியும், கபில்தேவும் வெற்றிக் கோப்பை வழங்கியது போன்ற படமாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். 1983- உலகக் கோப்பையை தன் தலைமையில் இந்தியாவுக்காக வென்று கொடுத்தவர் கபில்தேவ். அப்படிப்பட்ட ஜாம்பவானுடன் நடித்தது தனக்கு பெருமை என்று ரஜினியும் சுட்டுரையில் பதிவிட்டிருக்கிறார். 

-----------------------------------

"எஸ்.டி.ஆர். 48' படத்தை தயாரிக்கிறது ராஜ்கமல் நிறுவனம். படத்தை இயக்குவது தேசிங்கு பெரியசாமி. சிலம்பரசனின் படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படமாக அமையும் என்றும், படத்தில் ஃப்ளாஷ்பேக்கில் வரலாற்று பின்னணியில் ஒரு கதை இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதற்காகத்தான் சிலம்பரசன், "பத்து தல'யை முடித்துக் கொடுத்துவிட்டு தாய்லாந்து சென்றார் என்றும், அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து உடல் எடையை குறைத்ததுடன், தற்காப்பு கலைகளைக் கற்றிருக்கிறார். இப்போது கேரக்டரை இன்னும் மெரூகேற்ற அவர் லண்டன் சென்றிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். சில வாரங்கள் அவர் லண்டனில் இருப்பார். இப்போது படப்பிடிப்புக்கான தளங்களை தேடுகிறது படக்குழு. 

ADVERTISEMENT

-----------------------------------


ரஜினியின் 170ஆவது படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தில் வில்லனாக விக்ரம் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.  இன்னும் நேரடியாக விக்ரமிற்கு கதை சொல்லவில்லை. காரணம் விக்ரம் தன் குடும்பத்தோடு லண்டனில்தான் கோடை விடுமுறைக்காகவும், படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திற்காகவும் ஓய்வு எடுக்கப் போயிருக்கிறார். கிட்டத்தட்ட 15 நாட்களாக அங்கே இருக்கும் விக்ரம் தன் குடும்பத்தோடு இன்னும் ஒரு வாரத்தில் சென்னைக்குத் திரும்புகிறார். அதற்குப் பிறகுதான் கதையை கேட்டு முடிவு எடுக்கப் போகிறாராம். அவருக்கு பெரிய சம்பளம் தரப்போவதாகத் தகவல்கள் வெளியே புறப்பட்டதும் உண்மையானது இல்லை என்கிறார்கள். விக்ரம் படத்தை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் அவர் கதை கேட்டப் பிறகுதான் என்கிறார்கள்.  

-----------------------------------

விஜய்யின் 68 ஆவது படத்துக்காக அவரிடம் இயக்குநர்கள் அட்லி, கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி எனப் பலரும் அவரிடம் கதை சொல்லியிருக்கின்றனர். யாருக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு என எதிர்பார்த்த நிலையில், இந்த ரேஸில் எதிர்பாராத விதமாக வெங்கட் பிரபுவும் என்ட்ரி ஆகி அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றியிருக்கிறார். "பிகில்' படத்திற்கு பின் மீண்டும் விஜய்யை வைத்துப் படம் தயாரிக்க விரும்பியது ஏஜிஎஸ் நிறுவனம். இதுகுறித்து தொடர்ந்து விஜய்யிடம் பேசி வந்தனர். விஜய்யும் தன் அடுத்தடுத்த கமிட்மென்ட்களால் மற்ற நிறுவனங்களுக்கு படங்கள் செய்து வந்தார். இந்நிலையில்தான் ஏஜிஎஸை அழைத்து, தனது 68ஆவது படத்தைக் கொடுத்திருக்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT