தினமணி கதிர்

பேல்பூரி

DIN

கண்டது

(சென்னை போரூர் கிண்டி சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

''எனக்கு பசிகுமில்ல..?''

-ஏ.மஜ்பாசாகுல்,
அதிராம்பட்டினம்.

(மயிலாடுதுறை அருகேயுள்ள தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள ஓர் கிராமத்தின் பெயர்)

''மாமாகுடி''


-சோ.மாணிக்கம்,
குத்தாலம்.



(மதுரை- திருமங்கலம் நகர் பேருந்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் )

''செடிகளில் முள் இருப்பதற்காக. மலர்கள் வருத்தப்படுவதில்லை.''

-கா.பசும்பொன்,
துரை.

கேட்டது

(தென்காசி பேருந்து நிலையத்தில் தந்தையும் மகனும் பேசியது)

''அப்பா. நான் பேங்க் ஆபிஸர் ஆகுற மாதிரி கனவு கண்டேன்!''
''டேய். முதலில் டிகிரியில் அரியர் பேப்பரை பாஸ் பண்ணுற மாதிரி கனவு காணுடா?''

-கு.அருணாசலம்,
தென்காசி.

(சிதம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டரில் இரு பயணிகள்)

'' விழுப்புரத்துக்கு ஒரு டிக்கெட் கொடுங்க சார். வண்டி வருது சீக்கிரம்!''
''சினிமா பார்க்க மட்டும்தான் அரை மணி நேரம் முன்னாடி போறீங்க? வேற எங்க போனாலும் லேட்தான்!''

-பி.பரத்,
சிதம்பரம்.


(செங்கல்பட்டு நகைக் கடையில் இரு பெண்கள்)

''தங்கம் விலை இப்படி ஏறிப்போச்சு!''
''என்ன பண்றதுன்னே புரியல?''
'' அப்போ நகையை குறைச்சு வாங்கிக்கோங்கோ?''
'' மாப்பிள்ளை வீட்டுக்காரங்க குறைக்க மாட்டேங்கிறாங்களே!''

-ஜி.அர்ஜுனன்,
செங்கல்பட்டு.

யோசிக்கிறாங்கப்பா!


தன்னைத்தானே செதுக்கிக் கொள்ள உளிகள் தேவை இல்லை.
சில வலிகள் போதும்.

-ச.உமாதேவி,
திருவண்ணாமலை.

மைக்ரோ கதை


''ஐயா. இனிமே ஒரு துணி தேய்ச்சு தர ஏழு ரூபாய் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்!'' என்று சலவை செய்த துணிகள் அடங்கிய பையை கொண்டு வீட்டில் வைத்துவிட்டு பவ்வியமாகச் சொன்னார் மாணிக்கம்.
''வழக்கமா ஓர் துணிக்கு ஆறு ரூபாய் தானப்பா?''
''விலைவாசி ஏறிக்கிட்டே போகுதய்யா!''
'' இனிமே துணி தேய்க்க நான் வேற ஆளை பார்த்துக்கிறேன்!''
''சரிங்கய்யா, அப்புறம் உங்க இஷ்டம்'.
மறுநாள் தான் தேய்த்த சட்டைத் துணிகளைக் கொண்டு வந்து ஏகாம்பரத்திடம் மாணிக்கம் தர, '' இந்தாப்பா. நீ கேட்டபடியே எட்டு சட்டைக்கு தேய்ச்சதுக்கான பணம்!'என்றார்.
''அப்புறம் என்ன? கிளம்ப வேண்டியதுதானே !'' என மாணிக்கத்திடம் ஏகாம்பரம் சிடுசிடுத்தார்.
''ஐயா. உங்க சட்டை பையில் இரண்டு ஐநூறு ரூபாய்தாள் இருந்தது. நல்ல வேளை கிழியலை. நீங்க வாஷிங் மெஷினில் துவைச்சதுல கொஞ்சம் கசங்கி இருந்துச்சு! அதை சரி பண்ணிட்டேன். இந்தாங்கய்யா' என்று தன் சட்டைப் பையில் இருந்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து மாணிக்கம் ஏகாம்பரத்திடம் தந்தார்.
பணத்தைக் கூச்சத்துடன் பெற்றுக் கொண்டு, ஒரு நூறு ரூபாய் தாளை மாணிக்கத்திடம் தந்து, ''உன் நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு! இனிமேலும் நீதான் எப்பவும் போல் எங்க வீட்டு துணியை தேய்த்து தரணும்'' எனக் கூறினார். அதை வாங்க மறுத்த மாணிக்கம், ''என் வேலைக்கு நான் கேட்டபடி நீங்க கூலி கொடுத்தால் போதும்!'' என்று கூறி விடை பெற்று சென்றார்.

இரா. சாந்தகுமார்,
கூடுவாஞ்சேரி.

எஸ்எம்எஸ்

கனவுகளை நிஜமாக எண்ணி வாழ்வதும்
நிஜங்களை கனவாக எண்ணி மறப்பதும்தான் வாழ்க்கை!

- ஆ.மந்த்ரா,
தூத்துக்குடி.

அப்படீங்களா!

கேள்விகளுக்கு துல்லியமாகவும், அனைத்து தகவல்களையும் ஒன்றிணைத்து தொகுத்து வழங்கும் சாட்ஜிபிடி இப்போது செயலி வடிவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் 2022-இல் வெளியிட்ட திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சாட் ஜிபிடி உலகையை பிரமிக்க வைத்தது.
இணைய தேடுதலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த கூகுள் தேடுதலுக்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் சாட் ஜிபிடி உருவெடுத்துள்ளது.
குறிப்பிட்ட தலைப்பில் தேவைக்கு ஏற்ப தேடும் தகவல்களை பல்வேறு பிரிவில் ஒப்பிட்டு காட்டும் திறன் படைத்தது சாட் ஜிபிடி.
இதுவரை இந்த சாட்ஜிபிடி இணையத்தளத்தில் மட்டும் பயன்பாட்டுக்கு இருந்தது. தற்போது முதல் முறையாக அறிதிறன் பேசி செயலியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதலில் ஆப்பில் போன்களில் பயன்படுத்தப்படும் ஐஓஎஸ் செயலியாக இது வெளியிடப்பட்டுள்ளது.
இலவச பயன்பாட்டுக்காக முதலில் அமெரிக்காவில் சாட்ஜிபிடி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பல்வேறு நாடுகளுக்கு இது அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு சாட் பாட் உதவியுடன் குரல் தேடுதல் மூலம் சாட்ஜிபிடியை பயன்படுத்தலாம்.
விரைவில் ஆண்ட்ராய்டு செயலியும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அனைத்து துறைகளின் தகவல் தேடுதலை சாட்ஜிபிடி செயலி எளிதாக்கும்.

அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT