தினமணி கதிர்

சிரி...  சிரி...

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 

''ஏண்டா. உங்க வீட்ல நகை கொள்ளை போனதை பத்தி போலீஸ்ல  புகார் குடுக்கலையா..ஏன்?''
''எங்கம்மா  நகை தான் போச்சு! அதான் புகார் பண்ண வேண்டாமுன்னு பெண்டாட்டி சொல்லிட்டா?!''

அ.செந்தில்குமார்,
சூலூர்.

 

ADVERTISEMENT

''மச்சி. விருந்தாளிங்க இருக்கும்போதே உங்க மனைவி உன்னை அடிச்சா அவுங்க எப்படி உன் வீட்டுல தங்குவாங்க?''
''தங்கக் கூடாதுங்கிறதுதானே அவ  பிளானே !''



'' என்னடா.  பொங்கல்ல கல் இருக்கு?''
  'கல் இல்லாட்டி அது, 'பொங்' ஆயிடுமே!''



''நேற்று நான் பார்த்துட்டு வந்த பொண்ணு தமன்னா மாதிரி இருந்தா மச்சி!''
''டக்குனு  பிளேட்டை  மாத்திக்கிட வேண்டியதுதானே மச்சி?''
' 'அதுக்குள்ள 'நான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன் அண்ணா' ன்னு சொல்லி பிளேட்டை  அவ மாத்திட்டாளேடா?''

வி.ரேவதி,தஞ்சை
 

'' மச்சி... ஒருத்தனை நைய புடைச்சிட்டு வரப் போறேன்.''
''புடைக்க வசதியா  ஒரு முறம் எடுத்துட்டுப் போடா?''

 

'' ஸ்பெஷல் நூல் வடை சாப்பிடுறியா?''
 ''அது என்ன ஸ்பெஷல் நூல் வடை?''
''மாலையாக நூலில் கோர்த்து கொண்டு வருவோம்!'' 



' 'என்னடா,, அந்த மந்திரவாதி ஏன் ஸ்கேன் எடுக்க சொல்றாரு?''
'பிடித்திருப்பது பேயா,  பிசாசா' ன்னு
 ஸ்கேன் எடுத்து பார்த்தால்தான் தெரியுமாம்!''



''மச்சி.  ஹால்பிட்டல் பில்லில் தனியா 4000 சார்ஜ் போட்டுட்டாங்கடா?''
 '' எதுக்கு?''
''வந்த விசிட்டர்ஸ் ஆஸ்பிடல் கேன்டீன்ல என் பெயரைச் சொல்லி சாப்பிட்டு போயிட்டாங்கல்லாம்''



''மச்சான்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை  வரும்னு  டி.வி.யில் சொன்னாங்க? ஆனா எங்கள் கிராமத்தில் ஏன் பெய்யலை?''
''சமீபத்தில் அது செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்ந்துட்டுதாமே!!'

பர்வதவர்த்தினி,
பம்மல்

 

''ஒன்பதாம் படிக்கிற மகன் சாப்பிடவுடன் தட்டில் நிறைய மிச்சம் வைச்சி சாப்பாட்டை வேஸ்ட் பண்றான்டா...?''
''இனி தட்டில் மிச்சம் வைக்காதே! வயிற்றில் மிச்சம் வை. ஆரோக்கியமாய் இருப்பேன்னு சொல்லுடா அவனுக்கு..?''

இரா.வசந்தராஜன்,
கிருஷ்ணகிரி.

 

''பக்கத்து வீட்டு பசங்களோடு விளையாடுன்னு அனுப்பினா, நீங்க எதுக்கு சார் என் பையனை திட்டுனீங்க..?'
''பேருந்தில் எழுதியிருக்கும் ஒரு திருக்குறளை சொல்லுன்னா, ''சரியான சில்லறையை கொடுக்கவும்'-ன்னு சொல்றான் சார்''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT