தினமணி கதிர்

பேல் பூரி

DIN

கண்டது


(செங்கல்பட்டு மருத்துவமனை அருகே இருந்த ஆட்டோ பின்புறம் )

' 'அடக்கமாகும் வரை அடக்கமாக இரு''

ஜி. அர்ஜுனன்,  
செங்கல்பட்டு.

(தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்தில் உள்ள ஓர் கிராமத்தின் பெயர்)


ராஸ்கோல்பட்டி

மா. பழனி,  
கூத்தப்பாடி.

(சென்னையில் ஓடிய ஓர் ஆட்டோவில்....)

''என்னைப் பார்த்து வண்டி ஓட்டாதே! உன் குடும்பத்தை நினைத்து ஓட்டு!''

-ஜி.பாலாஜி,
கொரட்டூர்.


கேட்டது

(சிவகாசி நகரப் பேருந்தில் கண்டக்டரும், பெண்ணும்...)

''தாயே இந்தப் பஸ் சிவகாசி போகுது. சாத்தூர் இல்லை. திருத்தங்கலில் இறங்கி வேறு பஸ்ஸில் போங்க?''
''ஏனுங்க. நான் சுத்திப் போகணும்..!''
''எங்கே போனாலும் எப்படி போனாலும் காசா கொடுக்கப் போறீங்க. சுத்தி பார்த்துகிட்டே போக வேண்டியதுதானே!''

-ஏ.எஸ்.ராஜேந்திரன்,
விருதுநகர்.

(விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தம்பதி பேசியது)

''உன் சமையல் அறையில் நான் உப்பா?, சர்க்கரையா?''
''சமையல்காரனே நீதானே டார்லிங்!''

 கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

(திருச்சி பூங்கா ஒன்றில் நடைபயிற்சியில் இருவர் பேசியது)

''பசங்க.. சொல்பேச்சை கேட்கவே மாட்டேங்கிறாங்க..!''
''உங்களுக்கு இப்ப என்ன வயது''
''சீனியர் சிட்டிசன்!''
''அப்ப நீங்கதான் பசங்க சொல்பேச்சை கேட்டு இருக்கிற காலத்தைப் புத்திசாலித்தனமாக ஓட்டியாகணும்! என்ன புரிஞ்சதுங்களா?''

அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.


யோசிக்கிறாங்கப்பா!

உறுதி என்பது நிலைத்த முடிவு எடுப்பதல்ல. 
எடுத்த முடிவில் நிலைத்திருப்பது.

அ.கருப்பையா,
பொன்னமராவதி.

மைக்ரோ கதை

துணிக்கடையில் அத்தனைக் கூட்டமில்லை.  லதா ஆண்கள் ஆடைப் பகுதியில் நுழைந்து அரை மணி நேரம் துழாவினாள்.  மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சட்டையாக எடுத்துக் காட்டிய  சேல்ஸ்மேன் துரை,  கடைசியாக அவள் 999 ரூபாய்க்கு ஒரு சட்டையைத் தெரிவு செய்து எடுத்தபோது பொறுமை இழந்து, ''விலை அதிகமாச்சேம்மா?'' என்றார்.

அவள் வெடுக்கென, ''அடுத்த வாரம் என் ஹஸ்பெண்டுக்கு பிறந்த நாள் . இது அவருக்குப் பிறந்த நாள் பரிசு. பேசாம பில் போடச் சொல்லிப் பணத்தையும் கட்டுங்க!  எனக்கு வீட்ல நிறைய வேலை இருக்கு..'' என்றாள்.

சிரித்த சேல்ஸ்மேன் துரை, ''எனக்குச் சட்டை வாங்க என் கடைக்கே வந்து என்னையே எடுத்துக் காட்ட சொல்லி, என்னையே பணத்தையும் கட்டச் சொல்லிட்டு நிக்கறியே? 

சூப்பர் மனைவிம்மா நீ..''

துரை வார்த்தையை முடிக்கும் முன்பாக அவள் டெலிவரி கவுன்ட்டர் முன்னால் போய் நின்றிருந்தாள்.

பர்வதவர்த்தினி,
பம்மல்.


எஸ்எம்எஸ்


சாப்பிடும்போது திட்டுவது அப்பா. சாப்பிட்ட பிறகு அம்மா.
என்ன சாப்பாடுன்னு கேட்டா திட்டுவது மனைவி.

நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை.


அப்படீங்களா!

விண்வெளிக்குச் செல்வது என்பது அனைவருக்கும் கனவாக இருக்கும்.   ஆனால்,  உங்கள் பெயர் விண்வெளிக்குச் செல்வதை நனவாக்கலாம்.


சூரியக் குடும்பத்தில் அதிக துணைக் கோள்களை (நிலவுகள்) கொண்ட வியாழன் கோளுக்கு பொதுமக்கள் தங்கள் பெயரை எழுதி அனுப்பலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐரோபா கிளிப்பர் விண்கலத்தை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வியாழனுக்கும் அதன் துணைக் கோளான ஐரோபாவுக்கும் ஆய்வு செய்ய நாசா அனுப்புகிறது. அதற்காக டிசம்பர் 31, 2023 நள்ளிரவு வரையில் பொது மக்கள் தங்கள் பெயர்களை அனுப்பலாம். 'மேசேஜ் இன் ஏ பாட்டீல்' என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

உங்கள் பெயர் மைக்ரோ சிப்பில் எழுதப்பட்டு அமெரிக்க கவிஞர் அடா லிமோனின் கவிதையுடன் சேர்த்து அனுப்பி வைக்கப்படும். இந்த மைக்ரோ சிப் 2.6 பில்லியன் கி.மீ. தூரம் பயணம் செய்து 2030இல் வியாழனைச் சென்றடையும். இது துணைக் கோளான ஐரோபாவை 50 முறை சுற்றி ஆய்வை மேற்கொள்ளும். விண்வெளிக்கு உங்கள் பெயரை அனுப்பி கனவை நனவாக்க நாசா இணையத்தில்  ட்ற்ற்ல்ள்://ங்ன்ழ்ர்ல்ஹ.ய்ஹள்ஹ.ஞ்ர்ஸ்/ம்ங்ள்ள்ஹஞ்ங்-ண்ய்-ஹ-க்ஷர்ற்ற்ப்ங்/ள்ண்ஞ்ய்-ர்ய்/ பதிவு செய்யலாம்.

அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT