தினமணி கதிர்

திரைக்  கதிர்

தினமணி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி விட்டதால், மாரி செல்வராஜ் இயக்கி வரும் "மாமன்னன்' படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துவிட்டார். இந்நிலையில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவரே சொல்லியிருந்தார். இதனால் ராஜ்கமல் தயாரிப்பின் 54-ஆவது படமாக உருவாகும் படத்தில் உதயநிதிக்கு பதில் நடிக்கப் போவது யார் என்பது குறித்தும் பேச்சு எழுந்தது. இப்போது அந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது. கமலின் குட் புக்கில் இருக்கும் விஜய் சேதுபதிக்கு அந்த வாய்ப்பு போகலாம் என்கிறார்கள். 

----------------------------------------------------

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி  நடிக்கும் படத்திற்கு "பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி  நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.  கார்த்தி வேணுகோபாலன் இயக்குகிறார். 

----------------------------------------------------

பிரசாந்த் வர்மா இயக்கத்தில்,  தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் " ஹனுமான'. இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டீஸரில் இடம் பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் மற்றும் பின்னணி இசையின் மாயாஜாலத்தில், தேச எல்லைகளைக் கடந்து உலகளவில் மக்கள் வியப்படைந்திருக்கிறார்கள். பல அடி உயர பிரம்மாண்டமான அனுமான் சிலையின் தோற்றத்துடன் தொடங்கும் முதல் காட்சியிலிருந்து.. பனி படர்ந்த இமயமலையில் உள்ள குகைக்குள் நுழைந்து கேமராவின் கடைசி கோணம் வரை நீளும் அந்த டீஸரில்.. "ராம்.. ராம்..' எனும் கோஷம் ஒலிக்க.. தியானத்தில் அமர்ந்திருக்கும் ஹனுமான காட்சி வரை... ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

----------------------------------------------------

நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து "வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற பார்வையில்  "திருக்குறள் 100' என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி , அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் மணக்குடவர் , பரிமேலழகர் முதல் மு.கருணாநிதி ,சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள்.  அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT