தினமணி கதிர்

பேல்பூரி

22nd May 2022 06:00 AM

ADVERTISEMENT

 

கண்டது


கோவில்பட்டி அருகேயுள்ள ஓரு கிராமத்தின் பெயர்
""அத்தை கொண்டான்''

-எஸ்.மோகன்,
கோவில்பட்டி.

 

ADVERTISEMENT

அரக்கோணம் எம்ஆர்எஃப் தண்ணீர் லாரி ஒன்றில் கண்ட வாசகம்
""மழைநீர், மழலை நீர்''

-ஜி.கண்ணகி செயவேலன்,
அரக்கோணம்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர் "ஓணான்குடி''

-வரதன்,
திருவாரூர்.

 

கேட்டது


மயிலாடுறையில் ஓர் காய்கறிக் கடையில்...
""என்னங்க காய்கறி விலையை இப்படி கூட்டி சொல்றீங்க...?
""அதற்கென்ன பண்ண முடியும். நான் பெருக்க சொன்னால் இன்னும் அதிகமாக வந்துவிடுமே.. 
அதனால்தான்...''

-க.பன்னீர்செல்வம்,
மயிலாடுதுறை.

 

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே சீப்பு விற்கும் பெண்ணிடம் ஒருவர்:
""ஒரு பேன் சீப்பு குடும்மா!''
""ஏம்மா உனக்குதான் தலை வழுக்கை விழுந்திடுச்சே! வீட்டுக்கார அம்மாவுக்காக..''
""தலை வழுக்கைதான். ஆனா "தாடி'யில இருக்கிற பேன் தொல்லை தாங்கலியே!''

-சம்பத்குமாரி,
பொன்மலை.

 

பூந்தமல்லி ஹோட்டலில் நண்பர்கள் இருவர்
""மச்சி.. மாமியார் வீட்டில் பைக் தர்றேன்னுதை ஏன் வேண்டாமுன்னு சொல்லிட்ட..?''
""பெட்ரோல் போட்டு ஏழையாகணுமே!'

-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.


யோசிக்கிறாங்கப்பா!


""வியர்வை சிந்தாத மனிதனும், மை சிந்தாத பேனாவும் 
எதையும் சாதிக்க முடியாது''

-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.


மைக்ரோ கதை


ஒரு விமானத்தில் பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். விமானம் குலுங்கி ஆடியது.  எல்லா பயணிகளும் பயந்து, ஆண்டவனை வேண்டினர். ஆனால், ஒரு சிறுமி மட்டும் எந்தப் பதற்றமும் இல்லாமல் கையில் விளையாட்டுப் பொருள்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். 
விமானம் சமநிலைக்கு வந்தவுடன் சிறுமியிடம் பயணிகள் பதற்றப்படாமல் இருந்தது எப்படி? என கேட்டனர். 
அதற்கு சிறுமி புன்சிரிப்புடன் சொன்னாள்:
எனக்கு எந்தப் பயமும் இல்லை. காரணம் விமானத்தை ஓட்டும் விமானியே எனது அப்பாதானே. அப்பா எனக்கு எந்தத் தீங்கும் வராமல் காப்பாற்றுவார்.

-குடந்தை மோகனா அம்பி,
கும்பகோணம்.


எஸ்எம்எஸ்


மன நிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள வளமை. ஆடம்பரம் என்பது நாமே தேடிக் கொள்ளும் வறுமை.

-அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை.

 

அப்படீங்களா!

சந்திரனில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் செடிகளை முளைக்கச் செய்து விஞ்ஞானிகள் அமெரிக்காவின் புளோரிடா ஆராய்ச்சி சாதனை படைத்துள்ளனர். 
1969-ஆம் ஆண்டு முதல் 1972 வரையில் சந்திரனுக்கு அனுப்பிய அப்பல்லோ விண்கலத்தின் 11,12,17 பயணத்தின்போது சேகரிக்கப்பட்ட சிறிய அளவு மண்ணில் "தாலே கிரிஸ்' என்ற ஆராய்ச்சிக்கான செடியை விதைத்தனர்.
சந்திரன் மண்ணைப் போன்றே இருக்கும் எரிமலை சாம்பலிலும் செடிகளை விதைத்தனர்.  20 நாள்களில் சந்திரன் மண் செடிகளைவிட எரிமலை மண் செடிகள் செழிப்பாக வளர்ந்தன.
சந்திர மண் செடிகளின் இலைகள் சற்று சிகப்பு நிறமாகவும், குன்றிய வளர்ச்சியாகவும் காணப்பட்டது. எனினும், அதில் அதிக மரபணுக்கள் இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
சந்திரனில் இருந்து கொண்டு வரப்பட்ட மூன்று வெவ்வெறு பகுதி மண்ணில் செடிகள் வெவ்வேறு வகையில் வளர்ந்திருந்தன. 
இந்தச் செடிகளை அருந்துவதில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். எனினும், சந்திர மண்ணில் விளைவித்த உணவு பொருள்களிலும், பூமியின் மண்ணில் விளைவித்த உணவு பொருள்களிலும் உள்ள ஊட்டச்சத்து மற்றும் தரம் குறித்து அடுத்தகட்டமாக ஆய்வு நடத்தப்பட உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

-அ.சர்ப்ராஸ்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT