தினமணி கதிர்

திரைக் கதிர்

14th Aug 2022 04:14 PM

ADVERTISEMENT

 

தீவிர ஓய்வில் இருக்கிறார் விக்ரம். ஆறு மாதங்களாவது இப்படி ஒரு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.  அதனால் வீட்டிலேயே ஓய்விலிருந்து வருகிறார். இதற்கிடையே "துருவ நட்சத்திரம்' படத்திற்கான பேட்ச் ஒர்க் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஷூட் இல்லாமலேயே படத்தை முடித்துக் கொள்ளலாமா என்ற யோசனையும் இயக்குநர் கெளதம் மேனனுக்கு இருக்கிறதாம். விக்ரமிற்கு இருந்த உடல் சோர்வு, "பொன்னியின் செல்வ'னுக்காக எடுத்த கடுமையான குதிரையேற்ற பயிற்சிகளில் ஏற்பட்டது என்கிறார்கள்.

 

விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான "மாமனிதன்'  தற்போது "ஆஹா' டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்துக்கு, ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம் என தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கியோ திரைப்பட விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

 

வெங்கட் பிரபுவிடம் விஜய்க்கும் அஜித்திற்குமான ஒரு கதை இருப்பது உண்மைதானாம். அதை மெருகேற்றும் வேலை இரண்டு இயக்குநர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஓய்வு இல்லாமல் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறதாம். அஜித்திடம் அந்தக் கதையைச் சொல்லி அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட சம்மதம்ó சொல்லிவிட்டாராம். இப்படி ஒரு விஷயம் இருப்பது விஜய்க்கும் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. விஜய்யும், வெங்கட் பிரபுவும் நல்ல அலைவரிசையில் இருப்பதால் இதற்கான வாய்ப்பு உறுதி என்கிறார்கள்.

 

சூர்யா இனிமேல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களுக்கு மேல் செய்ய வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார். அதுவும் நல்ல கதை அமைந்தால் மட்டும்தானாம். அகரம் பவுண்டேஷனில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறாராம். அதற்காகக் கல்வி வல்லுநர்களையும், கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்களையும் தொடர்ந்து சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். 

 

மைக் மோகன், இப்போது ஹீரோவாக "ஹரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே விஜய் 66-இல் அவரை விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்திற்கு கேட்டதாகவும், அதில் நடிக்க சம்மதித்தகாகவும் கோடம்பாக்கத்தில் தகவல் கிளம்பியது. இதுபற்றி மோகனின் வட்டாரத்தில் விசாரித்தால், மறுக்கிறார்கள். "அண்ணன் ரோல், அப்பா ரோல் எல்லாம் பண்ற ஐடியாவே அவருக்கு இல்லை. இப்போதும் அவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் படத்தில் அவர் இல்லை'' என்கிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT