தினமணி கதிர்

திரைக்கதிர்

12th Sep 2021 10:02 PM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

 

நடிகை சன்னி லியோன் இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் நடிகையாக விளங்குகிறார்.  தற்போது  பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 2012- இல் பூஜா பட் இயக்கிய "ஜிஸ்ம் 2' என்ற படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஒரு சில படங்களில் பாடல்களில் மட்டும் நடித்து வருகிறார். 

சன்னி லியோன் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். நீச்சல் உடையில் ஊஞ்சல் மேல் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் சன்னி லியோன், "எனக்கு பக்கத்தில் உள்ள ஊஞ்சல் காலியாக உள்ளது, என்னுடன் ஊஞ்சலாட யார் வருகிறீர்கள்?' என்ற கேள்வியையும்  பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் "லைக்'குகளை குவித்து, கமெண்ட் செய்து வருகிறார்கள்.

------------------------------------------------------------------------------------------------

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய "காதல் கொண்டேன்', "புதுப்பேட்டை', "மயக்கம் என்ன' போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.  இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் "நானே வருவேன்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.  இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

------------------------------------------------------------------------------------------------

அட்லீ சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கானை சந்தித்து கதை கூறியுள்ளார். அது ஷாருக்கானுக்கு பிடிக்கவே நடிக்க சம்மதித்துள்ளார். இரண்டு வருடங்கள் கழித்து தற்போது அந்தப் படம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. நயன்தாரா அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ராவும் அந்தப் படத்தில் முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தில் நடிகை பிரியாமணி இணைந்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியான "சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் பிரியாமணி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக அவர் ஷாருக் உடன் இணைந்து நடிக்கிறார்.  படப்பிடிப்பு புணேவில் துவங்க உள்ளது. நடிகைகள் 
நயன்தாரா மற்றும் ப்ரியாமணி புணே விமான நிலையத்தில் காணப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

------------------------------------------------------------------------------------------------

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் "அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் "சாணிக்காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் முதல்நாளில் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த அல்லது இருண்ட நாட்களில்  நீ  என்னை நிரப்பும் மகிழ்ச்சி கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் உன்னை நான் நேசிக்கிறேன் அன்பே நைக்'  என்று தன்னுடைய செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.   நாய்க்குட்டிக்கு ரசிகர்கள் 
பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

------------------------------------------------------------------------------------------------

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான படம் "லாபம்'. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி பேசியதாவது:  ""கலைத்துறை என்னைச் சிந்திக்க வைத்தது. அதனால் இத்துறையில்  அடி எடுத்து வைத்தேன். ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று மட்டும் விமர்சிக்காதீர்கள். அதிலிருக்கும் எந்த சிந்தனை சிறந்தது? எது பலவீனமாக இருக்கிறது? என்பதை உணர்ந்து, திறனாய்வு செய்ய பழகிக் கொள்ளுங்கள். என்னுடைய வாரிசுக்கும் இதைத்தான் நான் கற்றுக் கொடுக்கிறேன். ஒரு விஷயத்தைக் குறை சொல்வதன் மூலமாக நம்மை நாமே புத்திசாலிகள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ஒருவரைக் குறை சொன்னால் நான் புத்திசாலி ஆகி விடுகிறேன்'' இவ்வாறு அவர் பேசினார்.

Tags : kadhir Cinema: news
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT