தினமணி கதிர்

பேல்பூரி

17th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

கேட்டது


(விருதுநகர் பேருந்து நிலையம் அருகில்)

""டேய் ராமு... ஒரு கடிகாரம் 13 வாட்டிமணி அடிச்சுச்சுன்னா என்ன அர்த்தம்?''
""தெரியல''
""அது ரிப்பேர் ஆயிடுச்சுன்னு அர்த்தம்''

ஜெய் கிருஷ்ணன்,
புலிபாரைபட்டி.

ADVERTISEMENT

 

(செங்கல்பட்டு அழகேசன் நகரில் ஒருவீட்டில்பாட்டி பேத்தி பேசிக்கொண்டது)

""பாப்பா இந்த டிரஸ் தீபாவளிக்கு எடுத்ததா?''
""இல்ல பாட்டி... எனக்கு எடுத்தது''

க.அருச்சுனன்,
செங்கல்பட்டு.


கண்டது


(தூத்துக்குடியில், அரசு அலுவலர் ஒருவரின் அலுவலகத்தில் கண்ட வாசகம்)

லஞ்சம் தவிர்
அரசாங்கம் என்னை நன்றாகக் "கவனித்து' கொள்கிறது .
நீங்கள் என்னை "எதற்காகவும் கவனிக்க'
வேண்டாம்.
நான் கண்ணியமாக இருக்க உதவுங்கள்... ப்ளீஸ்.

ஆ. மாடக்கண்ணு,
பாப்பான்குளம்.

 

(பொன்னமராவதியில் ஒரு மொபைல் கடையில்)

மொபைலைக் கையில் வைத்திரு...
உலகில் என்ன நடக்கிறது என்று தெரியும்!
மொபைலைக் கீழேவைத்தால் தான்
வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியும்!

அ. கருப்பையா,
பொன்னமராவதி.

 

(திருச்சியில் ஒரு பைக்கின் பின்புறம் கண்டது)

உயிர் தந்த தாய்க்காக கண்ணீர் விட யோசிப்பவன்,
கண்ணீர் தந்த காதலிக்காக உயிரையே விட துடிக்கிறான்...
காரணம்,கொழுப்பு.

எம் அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

 

யோசிக்கிறாங்கப்பா!

என்றைக்குமே
தனக்காக யாரையும்
குத்திக் கிழித்ததில்லை...
ஏவி விடப்பட்ட அம்பு.

கௌந்தி.
மு, சென்னை.

 

மைக்ரோ கதை

 

""வேணு ஸார்...உங்க செல்போனுக்கு நான்அனுப்பற ஃபோட்டோஸ்,
ஃபார்வேர்டு பண்ற மெúஸஜ் எல்லாம் நாள் தவறாமல் கரெக்ட்டாவருதா ?''
ஆபீசில், அப்போது தான் நுழைந்ததீபிகா அவரைப் பார்த்து ஆர்வமாய்க் கேட்டாள்.

""ஒண்ணுவிடாமல், எல்லாமேபொல பொலன்னுவந்து கொட்டுதுமேடம். ஆனால் படிச்சுப் பார்க்க நேரம் இல்லை'' சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் வேணு.

""எல்லாம் எப்படி இருக்கு ஸார்? உங்களுக்கு பிடிச்சிருக்கா? ஒண்ணுக்குமே பதிலே போடறதே இல்லையேஸார் நீங்க?''

முகத்தில், சிறிதுவருத்தம் காட்டினாள் தீபிகா. மேலும் சொன்னாள்:

""எல்லாரும் நான் அனுப்பறதை ஒண்ணு விடாமல் சீரியஸாப்பார்க்குறதாநெனச்சுட்டிருக்கேன் ஸார். இப்படி புஸ்வாணம் ஆகும்ன்னு நெனைக்கலே'' வேணு சிரித்தார். கோபத்துடன் அவரைப் பார்த்தாள் தீபிகா.

மதிய சாப்பாட்டு நேரம்.

வேணு, சாப்பிட்டு முடித்து டிபன் கேரியர் கழுவஅந்த பக்கமாய் நடந்துசென்றார்.

தீபிகா,தன் தோழி மணிமேகலையிடம்இரைந்து சொல்லிக் கொண்டிருந்தது ஜன்னல் வழியாக தெளிவாய் கேட்டது, அவருக்கு ...

"" குப்பை மாதிரிஎத்தனை மெசேஜ், போட்டோஸ் தேவையில்லாமல்வந்துஎன் போன்ல கொட்டி இருக்குபாரு மணிமேகலை. ஆத்திர ஆத்திரமாவருது . நிம்மதியா ஒரு வாய் என்னாலேசாப்பிடகூட முடியலேப்பா...''

சீ.குறிஞ்சிச்செல்வன்,
அகிலாண்டபுரம்.

 

எஸ்.எம்.எஸ்.

கேள்விக்குப் பதில் எதுவென்று
தெரியவில்லை என்றால் அது தேர்வு!
கேள்வியே எதுவென்று
தெரியவில்லை என்றால், அதுதான்வாழ்வு!

எல். மோகனசுந்தரி,
கிருஷ்ணகிரி-1


அப்படீங்களா!


புதிய புதிய ரோபோக்கள் இப்போது உலகில் பிறந்து கொண்டே இருக்கின்றன. தற்போது அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஒரு புதிய ரோபோவை. பெயர்: "அஸ்ட்ரோ'.

வீட்டு வேலைக்காரனாகவும், பாதுகாப்பாளராகவும் செயல்படக் கூடியது இந்த ரோபோ.

சக்கரங்களின் மூலம் வீடு முழுக்கச் சுற்றும் இந்த ரோபோவில் கேமரா, மைக்ரோ போன், மோஷன் சென்சார்ஸ் ஆகியவை உள்ளன. இதன் தலைப்பகுதியில் உள்ள மானிட்டர் சுழலும் தன்மை கொண்டது.

"குடிக்க தண்ணீர் கொடு' என்று சொன்னவுடன் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும்.

"நாங்கள் ஒவ்வொரு நாளும் இந்த சீரியல்களைப் பார்ப்போம்' என்று இந்த ரோபோவிடம் பதிவு செய்துவிட்டால்போதும், அந்த சீரியல்கள் தொடங்கும் நேரத்தில் இந்த ரோபோ தொலைக்காட்சியை ஆன் செய்துவிடும்.

இரவும் பகலும் வீடு முழுக்கச் சுற்றிவரும் இந்த ரோபோ, நீங்கள் தூங்கும்போதும், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஒரு பாதுகாவலராகச் செயல்படும்.

வீட்டில் யாரும் இல்லாதபோது வெளியாட்கள் வந்தாலோ, சன்னல் கண்ணாடியை உடைத்தாலோ உடனே உங்களுக்கு இந்த ரோபோ தகவல் கொடுத்துவிடும். அதுபோன்று, வீட்டில், வீட்டருகில் நெருப்பு பிடித்துப் புகை வந்தாலும் எச்சரிக்கை செய்யும்.

வீட்டுக்குள் சுற்றித் திரியும் இந்த ரோபோவால் தனிநபரின் அந்தரங்கம் பாதிக்கப்படும் என்று நினைப்பவர்கள், இந்த ரோபோவில் உள்ள கேமரா, சென்சார், மைக்ரோபோன் எல்லாவற்றையும் ஆஃப் செய்துவிடலாம். இல்லையென்றால் "வீட்டின் இந்தப் பகுதியை மட்டும் சுற்று' என்று கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

என்.ஜே.,
சென்னை-58.

ADVERTISEMENT
ADVERTISEMENT