தினமணி கதிர்

பேல்பூரி 

தினமணி

கண்டது


(வேதாரண்யம் வட்டம்நாலுவேதபதியில் கத்தி,அரிவாள்மனை போன்ற
பொருட்களை விற்பனைசெய்யும் கடையின் பெயர்)

மு.ப.சாமி அடுப்பங்கரை அலமாரி

-ந.விஜய்ஆனந்த், தோப்புத்துறை.

(கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டூ வீலர் வாட்டர் சர்வீஸ் சென்டரின் பெயர்)

வாகன குளிப்பகம்

இலக்கியா மகேஷ், கோவை.

(வேலூர் நாணயக் கண்காட்சியில்உள்ள பலகையில்)

பணமிருந்தால் சாதிக்கலாம்.
பயிற்சியிருந்தால் போதிக்கலாம்.

மா.வி.கோவிந்தராசன்,
கீழ்புதுப்பாக்கம்.

கேட்டது


(சிதம்பரம் காந்தி சிலை அருகில் இரு பெண்கள்)

""ஏண்டி கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் வர்றதுக்கு உனக்கு ஆறு மணி நேரமா?"
""காசு வாங்காத பஸ்ஸா பார்த்து மாறி மாறி ஏறி வர வேணாமா?''

ஏ.எஸ்.நடராஜன்,
சிதம்பரம்-1

(சென்னை-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸில் இருவர்)

""என்னப்பா... டிரெய்ன்ல ஏறினதும் ஹெட் போனை எடுத்து தோள் மேல போட்டுகிட்ட?''
""இப்பப் பாரு... டிரெய்ன்ல நிறைய பேர் ஹெட் போன் வித்துட்டு வருவாங்க. நாம ஸ்மார்ட் போன் வச்சிருக்கிறதால, நாம வாங்குவோம்னு எதிர்பார்ப்பாங்க. ஹெட்போன் வேணும்மான்னு நம்மை கேட்டுட்டு ஏமாந்து போவாங்க. அதைத் தவிர்க்கத் தான்''
""கரெக்ட்தான். கொஞ்ச நேரத்தில் ட்ரெயின்ல டிபன் வித்துட்டு வருவாங்க. எதுக்கும் நான் சாப்பிட்டுட்டேன்னு கழுத்தில போர்டு மாட்டிக்க. பாவம் ஏமாந்துவிடப் போறாங்க''

சாய் செந்தில்,
சங்கராபுரம்.

யோசிக்கிறாங்கப்பா!

சிக்கலிலும் சிக்னலிலும்
சிறிது நேரம் பொறுமையாகக்
காத்திருந்தால் போதும்...
வழி தானாக கிடைத்து விடும்.

ந. பிரபுராஜா,
மதுரை -2.

மைக்ரோ கதை


ஒரு நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவுசெய்தார்.

எல்லாரையும் தன் அறைக்கு வருமாறு அழைத்து, ""உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும். உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். யார் வெற்றி அடைகிறாரோ, அவர் தான் நிறுவனத்தின் அடுத்த மேலாளர்'' என்றார்.

அவர் தரும் விதையை தொட்டியில் ஊன்றி யார் நன்கு செடியை வளர்க்கிறாரோ அவரே போட்டியில் வெல்பவர்; அவருக்கே மேலாளர் பதவி என்று அறிவித்து, எல்லாருக்கும் விதைகளைத் தந்தார். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ரவியும் ஒரு விதை வாங்கிச் சென்றான். மனைவியின் உதவியுடன் தொட்டியில் விதையை நட்டு அதற்கு தண்ணீர், உரம் எல்லாம் இட்டான். ஆனால் விதை முளைக்கவே இல்லை. ரவி மிகுந்த ஏமாற்றத்துடன் தொட்டியைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆறு மாதம் கழிந்த பிறகு, எல்லாரும் தங்களுடைய செடி வளர்ந்த தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ரவி செடி வளராத காலி தொட்டியை எடுத்து வந்தான். அவற்றை எல்லாம் பார்த்த முதலாளி, ரவிதான் போட்டியில் வென்றதாக அறிவித்தார். அவனே அந்நிறுவனத்தின் அடுத்த மேலாளர் என்றார்.

எல்லாருக்கும் அதிர்ச்சி.

""நான் உங்களுக்கு கொடுத்த விதைகள் அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள். அவை முளைக்காது என்று எனக்குத் தெரியும். உங்களில் ரவி மட்டுமே உண்மையானவர்'' என்றார் முதலாளி.

சி.பி.செந்தில் குமார்,
சென்னிமலை.

எஸ்.எம்.எஸ்.

வாக்கிங்...
வாய் செய்த தவறுக்கு...
கால்களுக்குத் தண்டனை!
 

- கூ.முத்துலட்சுமி,
திருவாடானை.

அப்படீங்களா!


மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போது காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டே படிப்பதைப் பார்த்திருப்பீர்கள். பாட்டுக் கேட்டுக் கொண்டு படித்தால் முழு கவனத்துடன் படிக்க முடியுமா? என்ற சந்தேகம் உங்களுக்குள் தோன்றியிருக்க வாய்ப்புண்டு.

ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "வீ ஸ்டைல்' என்ற நிறுவனம், "வீ úஸான் ஸ்மார்ட் ஏர்போன்' ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த போனை காதில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து வரும் இசையைக் கேட்டுக் கொண்டே எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் முழுக்கவனத்துடன் ஈடுபட முடியும்என்கிறது அந்நிறுவனம்.

இந்த ஸ்மார்ட் போன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. நாம் ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, நமது மூளையின் அதிர்வலைகள், இதயத்துடிப்பு ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது, இந்த ஸ்மார்ட் போன். அதன் அடிப்படையில் முழுகவனத்துடனும், படைப்பாற்றலுடனும் நமது பணிகளைச் செய்யும்படி மூளையைச் செயல்பட வைக்க அதற்குரிய அளவில், தேவையான இசையை ஒலிபரப்புகிறது இந்தக் கருவி.

இதைப் பயன்படுத்துபவர்கள் படிக்கப் போகிறார்களா, கணினியில் வேலை செய்யப் போகிறார்களா அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளப் போகிறார்களா என்பதை முதலில் இந்தக் கருவிக்குத் தெரியப்படுத்த வேண்டும். எவ்வளவு நேரம், எப்போது இருந்து அதை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதையும் தெரிவித்துவிட வேண்டும்.

செய்யக் கூடிய பணி, நேரம், பணி செய்பவரின் மூளை அதிர்வலை, இதயத்துடிப்பு இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அதனடிப்படையில் கவனச்சிதறல் இல்லாதவகையில் எந்தப் பணியையும் செய்யக் கூடிய இசையை இந்தக் கருவி வழங்கிவிடும்.

என்.ஜே.,
சென்னை-58.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT