தினமணி கதிர்

சிரி... சிரி... 

17th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

""ஒரு வழியா எதிர் வீட்டுல திருடு  போனதையெல்லாம் கண்டுபிடிச்சிட்டாங்களாம்''
""யாரு திருடினதாம்?''
""அது தெரியாது... என்னென்ன பொருள் திருடு போயிருக்குன்னு கண்டுபிடிச்சிட்டாங்க''

------------------------------------------------------------------------------

"" எனக்கு ஃபாலோயர்ஸ் அதிகம்டி'' 
""ஃபேஸ்புக்குலயா?''
""இல்ல... நான் ரோட்டுல நடந்து போகும் போது''

ADVERTISEMENT

------------------------------------------------------------------------------

""சமையல் ருசியா இல்லைன்னா கூட என் புருசன் வாயே திறக்க  மாட்டாருடீ''
""நிஜமாவா சொல்றே?''
""ஆமாடி... அவரோட 
சமையலை அவரே எப்படி   குறை சொல்லிக்குவாரு?''

------------------------------------------------------------------------------

""இந்த எழுத்தாளருக்கு இப்பத்தான் மேரேஜ் ஆயிருக்கும்னு நினைக்கிறேன்''
""எப்படி?''
""இவ்வளவு  காலமா, சரித்திரக்கதை, சமூகக் கதைன்னு எழுதிட்டிருந்தவரு, திடீர்னு பேய்க் கதைக்கு மாறிட்டாரே''

------------------------------------------------------------------------------

ADVERTISEMENT
ADVERTISEMENT