தினமணி கதிர்

திரைக்கதிர்

21st Feb 2021 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள படம்"ஆக்ஷன்'.இப்படத்தின் மூலம் மலையாள வரவாக தமிழுக்கு வந்துள்ளவர் ஐஸ்வர்ய லெட்சுமி. இப்படத்துக்குப் பின்தனுஷ் நடிக்கும் "ஜகமே தந்திரம்', மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில்"கோட்சே'என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அடியெடுத்து வைத்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.

------------------------------------------------------------------------

"ஜகமே தந்திரம்', "கர்ணன்' ஆகிய படங்களை முடித்துவிட்ட தனுஷ்,தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இது அவருக்கு43-ஆவது படம்.இதில் புலனாய்வுப் பத்திரிகையாளராக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

 ------------------------------------------------------------------------

ADVERTISEMENT

அஜித்தின் "வலிமை' படத்தில் மலையாள இளம் நடிகரான துருவன் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் வெளியான "குயின்', "பைனல்ஸ்' ஆகிய படங்களில் நடித்தவர். "வலிமை' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். 

 ------------------------------------------------------------------------

இயக்குநர் வசந்தபாலன் தான் படித்த விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். அவரது தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

 ------------------------------------------------------------------------

"மைனா' புகழ் விதார்த் தனது 25-ஆவது படத்திற்கு வந்துள்ளார். பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை சீனிவாசன் இயக்கி வருகிறார்.இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான "அண்ணாதுரை' படத்தை இயக்கியவர் . த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.

 ------------------------------------------------------------------------

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டபடத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. இப்படத்தை மது என்பவர் எழுதி, இயக்குகிறார்.தமிழ், தெலுங்கில் இந்தப் படம் தயாராக உள்ளது. "உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதமும் தேவை' என்கிறார் ஸ்ரீரெட்டி.

 ------------------------------------------------------------------------

சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில்நடித்துள்ள படம் "ஏலே'. இப்படம் திரையரங்குகளிலும், ஓடிடி தளத்திலும் வெளியாவதில் சில சிக்கல்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.இதனால் வரும் 26-ஆம் தேதி நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளது படக்குழு. 

 ------------------------------------------------------------------------

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள "லைவ் டெலிகாஸ்ட்' என்ற வெப் சீரிஸில்நடித்துள்ளார் காஜல் அகர்வால். ""பேய்க்கு பயந்து கொண்டே பேயாக நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதை இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது'' என்கிறார் காஜல்.

 ------------------------------------------------------------------------ 

அறிமுகமாகி சில படங்களுக்கு இசையமைத்ததுமே விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றவர் அனிருத்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் "காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் அனிருத்தின் 25-ஆவது படமாக வெளி வர உள்ளது. விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். 

Tags : திரைக்கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT