தினமணி கதிர்

சிரி... சிரி...

DIN


""கணக்குப் பரீட்சை அன்னிக்கு, நடுவுல நடுவுல எழுந்து நின்னு ஸ்டெப் போட்டு ஆடுனியாமே!''
""நீங்ததானே சொன்னீங்க, ஸ்டெப்புக்கு மார்க் உண்டுன்னு! ''

""தரகரே... நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க... இப்படி செய்யலாமா?''
""ஏங்க... என்ன ஆச்சு இப்போ?''
""பொண்ணுக்கு உடம்பெல்லாம் மச்சமுன்னு சொன்னிங்க. ஆனா கருப்புன்னு சொல்லலையே?''

- ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.

""இந்தக் கடை முறுக்குல அப்படி என்ன ஸ்பெஷல் ?''
""உங்க பேரைச் சொன்னா, அந்த எழுத்தை எல்லாம் அப்படியே முறுக்கா பிழிஞ்சு கொடுப்பாங்க! ''

""இந்த டாக்டர் ஆஸ்பத்திரியை கோயிலா நினைக்கிறவர்''
""அதுக்காக, தினமும் 108 முறை ரவுண்ட்ஸ் போறதா?''

அப்ரோஸ் பானு,
சென்னை-131.

""குடும்பத்தோட வெளியூர் போறீங்களே, வீட்டுக்குப் பாதுகாப்பு யாரு?''
""வாசல்ல.. "கொரோனா குடும்பம்' ன்னு போர்டு வச்சிருக்கேன், பாருங்க!''

-வ.அமுதன்,  
வேதாரண்யம்.

""ஒரே வீட்டை ஏன் பத்துமுறை கொள்ளை அடிச்சே?'' 
""எஜமான், நான் அவங்க ஃபேமிலி திருடன். 
எப்பவுமே அவங்களுக்கு  விசுவாசமாஇருப்பேன்.''

எஸ். மாரிமுத்து,  
சென்னை -64
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT