தினமணி கதிர்

சிரி... சிரி... 

25th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

 

""காதலிக்கும் போது என்னை,  "மானே...மயிலே... குயிலே'ன்னு சொன்னவரு ,
 கல்யாணத்துக்குப் பிறகு, "பேய், பிசாசு, பூதம்'னு சொல்றாருடீ ?''
"" எப்பவுமே அந்தாளு  உன்னை  மனுசியாவே நினைக்கலைனு சொல்லு''


அம்மா: ஒரு மணி நேரமா  யார் கூட போன்ல பேசினே? 
மகள்: என் பிரெண்டு கீதா கூடம்மா...அவளோட  பர்த்டே பார்ட்டிக்கு நான் போகலைன்னு என் கூட பேச மாட்டாளாம்.


"" பன்முகம் உள்ளவர் சார் அவர்''
""அப்படியா...! எந்தெந்த துறையில வித்தகர்?''
""அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க''
 ""மூஞ்சி   தட்டையா  "பன்'   மாதிரி இருக்கும்னு  அப்படிச் சொன்னேன்''

ADVERTISEMENT

 

"சிவப்பா முறுக்கு மீசையோடு ஒருத்தர் இந்தப் பக்கம் போனாரா தம்பீ?''
 ""சிவப்பு  மீசையோடு இதுவரைக்கும் யாரையுமே நான் பார்த்ததில்லையே சார்?''

- வி. ரேவதி, தஞ்சை.

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT