வணிகம்

ஈஐடி பாரி லாபம் ரூ.286.90 கோடியாக உயர்வு

31st May 2023 06:39 PM

ADVERTISEMENT

 

சென்னை: சர்க்கரை உற்பத்தியாளரான ஈஐடி பாரி (இந்தியா) லிமிடெட் மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.286.90 கோடியாக பதிவு செய்துள்ளது.

முருகப்பா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்நிறுவனம், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.428.96 கோடியாக பதிவு செய்துள்ளது.

2023 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.1,573.70 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,827.74 கோடியானது.

ADVERTISEMENT

மதிப்பீட்டு காலாண்டில் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.5,756.35 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,865.28 கோடியானது.

2023 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ.23,743.798 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.35,283.02 கோடியானது.

சர்க்கரைப் பிரிவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு லாபம் ரூ.176 கோடியாகவும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.194 கோடியாகவும் இருந்தது.

வேளாண் இடுபொருட்கள் பிரிவு கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.397 கோடியிலிருந்து ரூ.432 கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் நிதி செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த ஈஐடி பாரி நிர்வாக இயக்குனர் எஸ்.சுரேஷ், சிறந்த விற்பனை வருவாய் மற்றும் அதிகரித்த உள்நாட்டு விற்பனை அளவு காரணமாக சர்க்கரை பிரிவின் முழுமையான செயல்பாட்டு லாபம் முந்தைய ஆண்டை விட சிறப்பாக உள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT