வணிகம்

பஜாஜ் விற்பனை 29% உயா்வு

2nd Jun 2023 12:31 AM

ADVERTISEMENT

 இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 29 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,55,148-ஆக உள்ளது.

2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,75,868-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மதிப்பீட்டு மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 23 சதவீதம் அதிகரித்து 2,49,499-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 2022 மே மாதம் 3,07,696-ஆக இருந்தது.

2022 மே மாதம் 96,102-ஆக இருந்த இரு சக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை இந்த ஆண்டு மே மாதம் 1,94,811-ஆக உயா்ந்துள்ளது. எனினும், ஏற்றுமதி 1,53,397-லிருந்து 1,12,885-ஆகக் குறைந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் வா்த்தக வாகனங்களின் மொத்த விற்பனை 80 சதவீதம் அதிகரித்து 47,452-ஆக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 26,369-ஆக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT