வணிகம்

அசோக் லேலண்ட் விற்பனை 13,134

2nd Jun 2023 12:32 AM

ADVERTISEMENT

 கடந்த மே மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை 13,134-ஆக சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 13,134-ஆக இருந்தது.

முந்தைய 2022-ஆம் ஆண்டின் அதே மாத விற்பனையோடு ஒப்பிடுகையில் இது 1 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 13,273-ஆக இருந்தது.

ADVERTISEMENT

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 1 சதவீதம் குறைந்து 12,378-ஆக உள்ளது. 2022 மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 12,458-ஆக இருந்தது.

அதே போல் நிறுவனத்தின் ஏற்றுமதியும் 815-லிருந்து 7.23 சதவீதம் சரிந்து கடந்த மே மாதத்தில் 756-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT