வணிகம்

டிஎல்எஃப் நிகர லாபம் 37% உயர்வு!

DIN

புதுதில்லி: டிஎல்எஃப் நிறுவனத்தின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 37 சதவீதம் அதிகரித்து ரூ.519.21 கோடியாக உள்ளது. அதன் நிகர லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.379.48 கோடியாக இருந்தது.

எவ்வாறாயினும், மொத்த வருமானம், இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.1,686.92 கோடியிலிருந்து ரூ.1,559.66 கோடியாக குறைந்துள்ளது.

சந்தை மூலதனத்தின் அடிப்படையில் டிஎல்எஃப் இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். இந்த நிதியாண்டில் ரூ.8,000 கோடிக்கும் அதிகமான விற்பனை முன்பதிவுகளை இலக்காகக் கொண்டுள்ளது டிஎல்எஃப். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT