வணிகம்

அதானி குழுமத்தின் 8 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம்!

DIN

புதுதில்லி: அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட பத்து நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் பங்குகள் இன்று லாபத்துடன் வர்த்தகமாகின.

மும்பை பங்குச்சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 14.22 சதவீதம் உயர்ந்து 1,364.05 ரூபாயாக நிலைபெற்றது. மதிய வர்த்தகத்தில் இது 19 சதவீதம் உயர்ந்து ரூ.1,421.95 ஆக உயர்ந்தது. அதே வேளையில் அதானி போர்ட்ஸ் பங்குகள் 5.44 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி 5 சதவீதமும், அதானி வில்மர் 5 சதவீதமும், என்டிடிவி 4.99 சதவீதமும் உயர்ந்தது.

அதானி பவர் 4.98 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 3.75 சதவீதமும், ஏசிசி 2.24 சதவீதமும் உயர்ந்தன. இருப்பினும் அதானி டிரான்ஸ்மிஷன் 5 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 4.99 சதவீதமும் சரிந்து வர்த்தகமாகியது.

ஜனவரி 24ஆம் தேதியன்று அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வுக் குழு குறித்த தனது அறிக்கையை வெளியிட்டதிலிருந்து பத்து நிறுவனங்களும் சந்தை மதிப்பீட்டில் பல கோடிகளை இழந்துள்ளன.

இதனையடுத்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 326.23 புள்ளிகள் சரிந்து 58,962.12 புள்ளிகளாக முடிவுற்றது.  அதே வேளையில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 88.75 புள்ளிகள் சரிந்து 17,303.95 புள்ளிகளாக முடிவுற்றது. 

அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட பத்து நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள் நேற்று (திங்கள்கிழமை) சரிந்து முடிவடைந்தன. முன்னணி நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 9 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து வர்த்தகமானது. இந்நிலையில் அதானி குழும நிறுவனங்களில் பெரும்பாலான பங்குகள் வெள்ளிக்கிழமை அன்று வீழ்ச்சியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT