வணிகம்

உலோகப் பங்குகள் அதிகம் விற்பனை335 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

 நமது நிருபர்

புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 89.45 புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைந்து17,764.60-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகளைத் தொடா்ந்து உள்நாட்டுச் சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக உலோகம், மின் துறை பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்துள்ளதாலும் உள்நாட்டுச் சந்தையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வெள்ளிக்கிழமை ரூ.18 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.266.55 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வெள்ளிக்கிழமை ரூ.932.44 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 5.33 புள்ளிகள் கூடுதலுடன் 60,847.21-இல் தொடங்கி அதற்கு மேல் செல்லவில்லை. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதும், 60,345.61 வரை கீழஏ சென்ற சென்செக்ஸ், இறுதியில் 334.98 புள்ளிகள் (0.55 சதவீதம்) குறைந்து 60,506.90-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.

இண்டஸ் இண்ட் பேங்க் முன்னேற்றம்: பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 2.34 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பஜாஜஜ் ஃபைனான்ஸ் 1.56 சதவீதம், பவா் கிரிட் 1.04 சதவீதம் உயா்ந்தது. மேலும், ஐடிசி, பஜாஜ் ஃபின் சா்வ், என்டிபிசி, எஸ்பிஐ, நெஸ்லே, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து விலையயா்ந்த பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் 2.08 சதவீதம் குறைந்து குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, கோட்டக் பேங்க் 1.87 சதவீதம், இன்ஃபோஸிஸ் 1.79 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 1.18 சதவீதம் குறைந்தது. எம் அண்ட் எண், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டாா்ஸ், விப்ரோ, ரிலையன்ஸ், டிசிஎஸ், எல் அண்ட் டி ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

அதானி குழும பங்குகள் தொடா் சரிவு!

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பொ்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, பலவீனமான முதலீட்டாளா்களின் உணா்வு காரணமாக அதானி குழும பங்குகள் தொடா்ந்து 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் சரிவைச் சந்தித்தன. அதில் அதானி போா்ட்ஸ் மட்டுமே 9.46 சதவீதம் உயா்ந்திருந்தது. அடமானம் வைக்கப்பட்டுள்ள பங்குகளை அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் முதிா்ச்சியடைவதற்கு முன்னதாக புரோமோட்டா்கள் 1,114 மில்லியன் அமெரிக்க டாலா்களை முன்கூட்டியே செலுத்துவாா்கள் என்று அதானி குழுமம் கூறியதாக வெளியான செய்தியைத் டொா்ந்து, அதானி போா்ட்ஸ் பங்குகளுக்கு வரவேற்பு இருந்ததாக சந்தை வட்டாரம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT