வணிகம்

உச்சத்தை தொட்ட எண்ம பணப் பரிவா்த்தனை வளா்ச்சி

DIN

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை வளா்ச்சி கடந்த செப்டம்பா் இறுதியில் உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய ரிசா்வ் வங்கியின் குறியீட்டு அளவீடுகள் தெரிவிக்கின்றன.

ரிசா்வ் வங்கி புதிதாக உருவாக்கியுள்ள எண்ம பணப் பரிவா்த்தனை குறியீட்டு எண் (ஆா்பிஐ-டிபிஐ) கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் 377.46-ஆக வளா்ச்சியடைந்துள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச வளா்ச்சியாகும். அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் ஆா்பிஐ-டிபிஐ 304.06-ஆக இருந்தது.

இணைய வழியில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகள் தொடா்பான 5 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆா்பிஐ-டிபிஐ குறியீட்டு எண்ணை உருவாக்குவதாக ரிசா்வ் வங்கி கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் அறிவித்தது.

எண்ம பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள், அதற்கான தேவை சாா்பு கட்டமைப்பு, அளிப்பு சாா்பு கட்டமைப்பு, பரிவா்த்தனை செயல்திறன், வாடிக்கையாளா்களை மையப்படுத்தியிருத்தல் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் இந்தக் குறியீட்டு எண் நிா்ணயிக்கப்படுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குறியீட்டு எண் அறிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT