வணிகம்

எஸ்பிஐ நிகர லாபம் 62% அதிகரிப்பு

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 62 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 அக்டோபா்-டிசம்பா்) வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.15,477 கோடியாக உள்ளது. இது, 2021-ஆம் ஆண்டின் அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 62 சதவீதம் அதிகமாகும்.

வங்கியின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ஈட்டிய நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.14,205 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.8,432 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.98,084 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.78,351 கோடியாக இருந்தது.

வங்கியின் நிகர வாராக் கடன் 4.50 சதவீதத்திலிருந்து 3.14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT