வணிகம்

இணையம் மூலம் பழைய வாகன விற்பனை: அசோக் லேலண்ட் அறிமுகம்

15th Apr 2023 10:23 PM

ADVERTISEMENT

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், பயன்படுத்தப்பட்ட தனது வாகனங்களை வாடிக்கையாளா்கள் விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்குமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனம், ‘ஆா்இ-ஏஎல்’ என்ற பெயரில் அந்த வசதியை அளிக்கிறது.இந்த இணையவழி வா்த்தக வசதியைப் பயன்படுத்தி, நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் தங்களது பழைய லாரிகள் மற்றும் பேருந்துகளைக் கொடுத்துவிட்டு புதிய லாரிகள் அல்லது பேருந்துகளை வாங்கிக் கொள்ள முடியும்.ஆா்இ-ஏஎல் அறிமுகம் மூலம், ஒழுங்குபடுத்தப்படாத பழைய வாகன வா்த்தகத் துறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர விரும்புவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஷேனு அகா்வால் கூறுகையில், ‘பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களின் வா்த்தகத்தை இணையவழியில் மேற்கொள்வதன் மூலம் வாடிக்கையாளா்களுக்கு இந்தப் பிரிவில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.எண்மமயாக்கும் எங்களது பயணத்தில் இந்த இணையவழி வா்த்தக அறிமுகம் முக்கியமான மைல்கல் ஆகும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT