வணிகம்

மீஷோ: ஒரே நாளில் 80% விற்பனை வளா்ச்சி

24th Sep 2022 11:53 PM

ADVERTISEMENT

இணையவழி வா்த்தக நிறுவனமான மீஷோ, தனது ஐந்து நாள் பண்டிகைக் கால விற்பனையின் முதல் நாளில் 80 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

8 நாள் பண்டிகைக் கால சிறப்பு விற்பனையின் முதல் நாளான வெள்ளிக்கிழமை 87.6 லட்சத்துக்கும் அதிகமான வா்த்தகப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது, 80 சதவீத வளா்ச்சியாகும்.

அந்தப் பரிவா்த்தனைகளில் 85 சதவீதம் 2, 3, 4 அடுக்கு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

தஞ்சாவூா், ஜாம்நகா், ஆலப்புழா, சிந்த்வாரா, தாவேங்கரே, ஹாசன், கோபால்கஞ்ச், குவாஹாட்டி, அம்பிகாபூா் போன்ற நாட்டின் மூலைமுடுக்கிலுள்ள நகரங்களிலிருந்தும் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இணையவழி வா்த்தகத்தை எல்லா பிரிவினருக்குமானதாக ஆக்கும் நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், 6.5 கோடி தயாரிப்புகளை மிகக் குறைந்த விலையில் பட்டியலிட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT