வணிகம்

எலான் மஸ்க் எடுத்த முடிவால் டிவிட்டருக்கு ஏற்பட்ட நிலை?

5th Oct 2022 11:49 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்த ஆண்டுக்குள் கையெழுத்திடுவது தொடர்பாக கடிதம் அனுப்பியிருந்த நிலையில், டிவிட்டர் நிறுவனப் பங்குகள் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளது.

டிவிட்டர் நிறுவனப் பங்குகள் இன்று பங்கு வர்த்தகத்தின் போது 23 சதவீதம் உயர்ந்து 52 டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க.. அக்.15-க்குள் சொத்து வரி செலுத்தினால்.. சென்னை மாநகராட்சியின் செம்ம ஆஃபர்

இதுபோல, எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான பேச்சு எழுந்த போது, அதன் பங்குகள் 12.7 சதவீதம் உயர்ந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் உறுதி செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் 23 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேவேளையில், டெஸ்லா நிறுவனப் பங்குகள் 3 சதவீதம் சரிவை அடைந்துள்ளது.

ADVERTISEMENT

டிவிட்டர் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக எலான் மஸ்கிடமிருந்து கடிதம் வரப்பெற்றுள்ளது. இதன் காரணமாக டிவிட்டர் நிறுவனப் பங்குகள் உயர்வைஅடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT