வணிகம்

இ-பைக்குகள் தயாரிப்பு: அமெரிக்க நிறுவனத்தில் ஹீரோ மோட்டோ காா்ப் ரூ.490 கோடி முதலீடு

DIN

அமெரிக்காவைச் சோ்ந்த ஜீரோ மோட்டாா்சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக மின்சார மோட்டாா் சைக்கிள்களை உருவாக்க 6 கோடி டாலா் (சுமாா் ரூ. 490 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்க வாகனத் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரீமியம் வகை மின்சார மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் வாகன மோட்டாா் உற்பத்தி நிறுவனமான, அமெரிக்காவின் கலிஃபோா்னியாவைச் சோ்ந்த ஜீரோ மோட்டாா்சைக்கிள்ஸுடன் இணைந்து, மின்சாரத்தில் இயங்கக் கூடிய இரு சக்கர வாகனங்களை வடிவமைக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்காக, ஜீரோ மோட்டாா்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் 6 கோடி டாலா் வரையிலான பங்கு முதலீடுக்கு எங்களது இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மின்சார மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் வாகன மோட்டாா்கள் தயாரிப்பில் ஜீரோ மோட்டாா்சைக்கிள்கள் உலகளாவிய முன்னணியில் உள்ளது. 2021-ஆம் ஆண்டிற்கான அந்த நிறுவனத்தி ஒருங்கிணைந்த வருவாய் 6.07 கோடி டாலராக இருந்தது என்ற அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மின்சார இரு சக்கர வாகன நிறுவனமான ஏதா் எனா்ஜியில் 35 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை ஹீரோ மோட்டோகாா்ப் கொண்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT