வணிகம்

உச்சத்தில் இந்திய பங்குச் சந்தை வணிகம்!

29th Nov 2022 08:45 PM

ADVERTISEMENT

 

மும்பை: ஆசிய சந்தைகளில் பெரும்பாலும் உறுதியான போக்கு தொடர்வதாலும், தொடர்ந்து வெளிநாட்டு நிதி வருவதாலும், இன்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டது.

30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 177.04 புள்ளிகள் உயர்ந்து 62,681.84 ல் நிலைப்பெற்றது. பகல் வர்த்தகத்தில் ​​அது 382.6 புள்ளிகள் உயர்ந்து அதன் வாழ்நாள் இன்ட்ரா-டே உச்சமான 62,887.40 ஆக இருந்தது. அதே நிலையில், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 55.30 புள்ளிகள் உயர்ந்து 18,618.05 ல் முடிவடைந்தது. 

இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, நெஸ்லே, டாக்டர் ரெட்டிஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகியவை உயர்ந்து முடிந்தன. அதே வேளையில் இண்டஸ் இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி, பவர் கிரிட் மற்றும் எல் & டி ஆகிய பங்குகள் குறைந்து முடிந்தன.

ADVERTISEMENT

ஆசியாவில் சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தது. அதே நேரத்தில் டோக்கியோ பங்குச் சந்தை சற்று இறக்கம் கண்டது.

சர்வதேச எண்ணெய் பெஞ்ச்மார்க் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.45 சதவீதம் உயர்ந்து 85.23 அமெரிக்க டாலராக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT