வணிகம்

ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்! எந்தெந்த நிறுவனங்களின் பங்குகள் உயர்வு?

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. 

கடந்த வெள்ளிக்கிழமை 62,293.64 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது. 

பிற்பகல் 3.30 மணிக்கு பங்குச்சந்தை முடிவில் 211.16 புள்ளிகள் அதிகரித்து 62,504.80 புள்ளிகளில் வர்த்தகமானது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 18,562.75 புள்ளிகளில் முடிந்தது.

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, ரிலையன்ஸ், நெஸ்ட்லாண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஐசிஐசிஐ வங்கி. ஆக்சிஸ் பேங்க், இண்டஸ்இண்ட், என்டிபிசி, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. 

அதேநேரத்தில் டாடா ஸ்டீல், ஹெச்டிஎப்சி பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் இறக்கம் கண்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT