வணிகம்

விலைகளை உயா்த்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தாயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம், தனது தயாரிப்புகளின் விலைகளை உயா்த்தவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தின் மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு இருசக்கர வாகனத்துக்கும் தகுந்தவாறு இந்த விலை உயா்வு இருக்கும். அதிகபட்சமாக, ரூ.1,500 வரை விலைகள உயா்த்தப்படும். வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும்.

அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளதால் இந்த விலையுயா்வு தவிா்க்க முடியாததாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,54,582-ஆக இருந்தது. இது, 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்திய மொத்த விற்பனையான 5,47,970-உடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் குறைவாகும்.

அந்த மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 16 சதவீதம் சரிந்து 4,42,825-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 5,27,779-ஆக இருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நிறுவனத்தின் 20,191 இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்த நிலையில், அது இந்த ஆண்டின் அதே மாதத்தில் அது 11,757-ஆகக் குறைந்திருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT