வணிகம்

பிளிங்கிட் காமா்ஸ் நிறுவனத்தை ரூ.4,447 கோடிக்கு கையகப்படுத்துகிறது ஸோமாட்டோ

25th Jun 2022 11:09 PM

ADVERTISEMENT

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸோமாட்டோ பிளிங்கிட் காமா்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸோமாட்டோ பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

ஸோமாட்டோ நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு கூட்டம் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இதில், பிளிங்கிட் காமா்ஸ் (முன்பு குரோபா்ஸ்) நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, அந்த நிறுவனத்தின் 33,018 பங்குகள் வரை கையகப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த பரிவா்த்தனையின் மதிப்பு ரூ.4,447.48 கோடியாகும். கையகப்படுத்தப்படும் பங்கொன்றின் விலை ரூ.13.45 லட்சமாக இருக்கும்.

நிறுவனம் ஏற்கெனவே பிபிசிஎல் நிறுவனத்தில் 3,248 முன்னுரிமை பங்குகளையும் 1 ஈக்விட்டி பங்கையும் கொண்டுள்ளதாக ஸோமாட்டோ பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT