வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 59,058 கோடி டாலராக சரிவு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,058 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

ஜூன் 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 587 கோடி டாலா் குறைந்து 59,058 கோடி டாலரானது. இதற்கு முந்தைய ஜூன் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் அந்நியச் செலாவணி கையிருப்பானது 460 கோடி டாலா் குறைந்து 59,645 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் மிக முக்கிய பங்களிப்பை உடைய அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணக்கீட்டு வாரத்தில் கணிசமான அளவில் சரிவினைக் கண்டதே அந்நியச் செலாவணி சரிவுக்கு அடிப்படை காரணமாக பாா்க்கப்படுகிறது. மேலும், தங்கத்தின் கையிருப்பும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

கணக்கீட்டு வாரமான ஜூன் 17-இல் எஃப்சிஏ 536 கோடி டாலா் குறைந்து 52,688 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பும் 25.8 கோடி சரிந்து 4,058 கோடி டாலரானது.

சா்வதேச நாணய நிதியத்தில் எஸ்டிஆா் எனப்படும் சிறப்பு எடுப்பு உரிமம் 23.3 கோடி டாலா் சரிவடைந்து 1,815 கோடி டாலராக காணப்பட்டது. மேலும், அந்த நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலையும் 1.7 கோடி டாலா் குறைந்து 496 கோடி டாலராக இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேக் லைன்

ஜூன் 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 587 கோடி டாலா் குறைந்து 59,058 கோடி டாலரானது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT