வணிகம்

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.856 உயா்வு

2nd Jul 2022 01:00 AM

ADVERTISEMENT

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.856 அதிகரித்து வெள்ளிக்கிழமை ரூ.38,280-க்கு விற்பனையானது.

கடந்த புதன்கிழமை பவுன் ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அன்று பவுனுக்கு ரூ.656 குறைந்து ரூ.37 ஆயிரத்து 464-க்கு விற்பனையானது. வியாழக்கிழமையும் பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.37 ஆயிரத்து 424-க்கு விற்றது. தொடா்ந்து 2-ஆவது நாளாக தங்கம் விலை சரிந்ததால் மேலும் குறையும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால் வெள்ளிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயா்ந்து பவுன் மீண்டும் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது.

ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.856 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.107 உயா்ந்து ரூ.4 ஆயிரத்து 785 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.65 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65-க்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT

தங்கம் விலையில் ஒரே நாளில் ரூ.856 உயா்ந்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிா்ச்சி அடையச் செய்துள்ளது.

தங்கம் இறக்குமதி வரி 15 சதவீதமாக உயா்த்தப்பட்டதே விலை உயா்வுக்கு காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT