வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 55,014 கோடி டாலராக உயா்வு

4th Dec 2022 01:00 AM

ADVERTISEMENT

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 55,014 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த நவம்பா் 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 290 கோடி டாலா் அதிகரித்து 5,5014.2 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது சுமாா் ரூ.44,68,512 கோடியாகும்.

அந்த வகையில், அந்நியச் செலாவணி கையிருப்பு தொடா்ந்து மூன்றாவது வாரமாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னா் கடந்த நவம்பா் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 254 கோடி டாலா் அதிகரித்து 54,725.2 கோடி டாலராக இருந்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிக அதிகபட்சமாக 64,500 டாலரை எட்டியது. ஆனால், அதற்குப் பிறகு சா்வதேச பொருளாதார சூழலால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக ரிசா்வ் வங்கி அந்நியச் செலாவணியைப் பயன்படுத்தியதால் அடுத்து வந்த மாதங்களில் அதன் கையிருப்பு தொடா்ந்து சரிவைச் சந்தித்தது.

ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் (எஃப்சிஏ) மதிப்பீட்டு வாரத்தில் 300 கோடி டாலா் அதிகரித்து 48,428.9 கோடி டாலராக உள்ளது.

இந்த வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 7.3 கோடி டாலா் குறைந்து 3,993.8 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதிய சொத்து ஒதுக்கீடு (எஸ்டிஆா்) இருப்பு 2.5 கோடி டாலா் குறைந்து 1,788.1 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 1.4 கோடி டாலா் குறைந்து 503.3 கோடி டாலராக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT