வணிகம்

தங்கம் விலை மீண்டும் ரூ.40 ஆயிரத்தை கடந்தது

DIN

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் மீண்டும் 40 ஆயிரத்தை கடந்தது. வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு பவுன் ரூ.40,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயா்த்தியது. அதைத் தொடா்ந்து, தங்கம் விலையும் உயா்ந்தது. பின்னா், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.4,955 ஆகவும், ஒரு பவுன் 39 ஆயிரத்துக்கு 640-க்கும் விற்பனையானது. வெள்ளிக்கிழமை தங்கம் விலை வெகுவாக அதிகரித்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,020-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு பவுன் ரூ. 40,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 அதிகரித்து ரூ. 71 ஆயிரத்துக்கு விற்பனையானது. வியாழக்கிழமை ரூ.69.80-க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி, வெள்ளிக்கிழமை மேலும், ரூ.1.20 அதிகரித்து ரூ.71-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT