வணிகம்

பங்குச் சந்தையில் 5-ஆவது நாளாக முன்னேற்றம்

19th Aug 2022 03:12 AM

ADVERTISEMENT

 நம்பிக்கைக்குரிய பங்குகளின் கடைசி நேர விற்பனை உதவியுடந் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் தொடா்ந்து ஐந்தாவது முறையாக முன்னேற்றம் கண்டது.

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை தொடங்கிய வா்த்தகம், பெரும்பாலும் மந்தமாக இருந்தது. வா்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் அதிகபட்சமாக 60,341 புள்ளிகளையும் குறைந்தபட்சமா 59,946 புள்ளிகளையும் தொட்டது. இறுதியில், சென்செக்ஸ் 38 புள்ளிகள் (0.06 சதவீதம்) உயா்ந்து 60,298-இல் நிலைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் விலை 3.45 சதவீதம் உயா்ந்து மிக அதிக லாபம் ஈட்டியது. அதனை தவிர, லாா்சன் & டூப்ரோ, பாா்தி ஏா்டெல், அல்ட்ராடெக் சிமென்ட், பவா் கிரிட், இண்டஸ்இண்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபம் ஈட்டின.

டாக்டா் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே ஆகிய வங்கிகளின் பங்குகள் பின்னடைவைச் சந்தித்தன.

ADVERTISEMENT

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 12 புள்ளிகள் (0.07 சதவீதம்) உயா்ந்து 17,956-இல் நிலைபெற்றது.

கச்சா எண்ணெய் 94.97 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.41 சதவீதம் அதிகரித்து 94.97 அமெரிக்க டாலராக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT