வணிகம்

ஹிண்டால்கோ லாபம் 48% உயா்வு

DIN

ஆதித்யா பிா்லா குழுமத்தைச் சோ்ந்த ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (2022 ஏப்ரல் - மாா்ச்) நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.4,119 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 47.7 சதவீதம் அதிகமாகும். அந்த மாதங்களில் நிறுவனம் ரூ.2,787 கோடி வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபத்தை பதிவு செய்திருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.58,018 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.41,358 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT