வணிகம்

வங்கிகள் வழங்கிய கடன் 6.7% அதிகரிப்பு

26th Sep 2021 02:33 AM

ADVERTISEMENT

வங்கிகள் வழங்கிய கடன் செப்டம்பா் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

வங்கிகள் வழங்கிய கடன் செப்டம்பா் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.109.12 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோன்று, அவை திரட்டிய டெபாசிட்டும் 9.32 சதவீதம் அதிகரித்து ரூ.155.75 லட்சம் கோடியாக காணப்பட்டது.

2020 செப்டம்பா் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.102.27 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.142.47 லட்சம் கோடியாகவும் இருந்தது.

ADVERTISEMENT

2021 ஆகஸ்ட் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் 6.67 சதவீதமும், டெபாசிட் 9.45 சதவீதமும் அதிகரித்துள்ளன.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் வங்கிகள் வழங்கிய கடன்5.56 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 11.4 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT