வணிகம்

அந்நிய செலாவணி வழக்கு: அமேஸான், ஃபியூச்சா் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

29th Nov 2021 01:35 AM

ADVERTISEMENT

அமேஸான்-ஃபியூச்சா் நிறுவனங்களுக்கு இடையே கையொப்பமான ஒப்பந்தத்தில் அந்நிய செலாவணி முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாா் தொடா்பாக விசாரிக்க அந்நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துடன் இணைப்பதற்காக ரூ.24,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஆண்டில் கையொப்பமானது. இதன் மூலமாக, தங்களுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனம் மீறிவிட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த அமேஸான் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த நீதிமன்றத்தில் முறையிட்டது.

அதை விசாரித்த நீதிமன்றம், ஃபியூச்சா்-ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்குத் தடை விதித்தது. அந்த உத்தரவை இந்தியாவில் செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது, அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளையும், அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகளையும் மீறி ஃபியூச்சா் நிறுவனத்தில் அமேஸான் முதலீடு செய்ய முயற்சித்திருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

ADVERTISEMENT

அந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமேஸான், ஃபியூச்சா் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அமேஸான் இந்தியா தலைவா் அமித் அகா்வால் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பாணை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அமேஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறையின் அழைப்பாணை குறித்து ஃபியூச்சா் நிறுவனம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு தொடா்பாக இரு நிறுவனங்களிடம் இருந்து சில ஆவணங்களைப் பெற்று அமலாக்கத் துறை ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT