வணிகம்

' ஸ்னாப் சாட் ' செயலி பிரச்சனை - நடவடிக்கை எடுத்த நிர்வாகம் 

30th Jul 2021 11:25 AM

ADVERTISEMENT

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தில் மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப பல செயலிகள் உருவாக்கப்படுகிறது. பல லட்சம் செயலிகள் இருந்தாலும் மிகச் சிலவைதான் அதிக பயனாளர்களைக் கொண்டுள்ளது .

அதில்  ' ஸ்னாப் சாட் ' எனும் புகைப்படங்களை  உடனுக்கு உடன் எடுத்து பல்வேறு எடிட்களை செய்து செய்திகளை அனுப்பும்   செயலி மிகப்பிரபலம்.

இதையும் படிக்க | ஆண்டு முழுவதும் குறைந்த விலைக்கு முட்டை: விளம்பரத்தின் பகீர் பின்னணி

நேற்று ( வியாழக்கிழமை ) மாலை  ட்விட்டரில் 1 ,25.000 பேர் தங்களுக்கு ஸ்னாப்சாட் வேலை செய்யவில்லை என்றும் ஹாங் ஆகிறது என்றும்   புகார் அளித்தனர். நிறுவனம் ஆரம்பித்த நாளிலிருந்து இப்படிப்பட்ட பிரச்சனை வந்ததில்லை என்பதால் குழம்பிய நிர்வாகம் சிறிது நேரம் கழித்து " அதிக பயனாளர்கள் இருப்பதால் ஏற்பட்ட ஹாங்கிங்  காரணமாக செயலி வேலை செய்யவில்லை . தற்போது லாகின் மற்றும் ஹாங் பிரச்னைகளை சரி செய்துவிட்டோம் . மீண்டும் செயலியை இயங்குங்கள் பிரச்சனை வந்தால் செயலியைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் " என நிர்வாகம் சார்பாக ட்விட்டரில் தெரிவித்தனர் . 

ADVERTISEMENT

பின் ஒருமணிநேரம் கழித்து செயலி பழைய நிலைமைக்கு திரும்பியதாக  பாதிப்படைந்தவர்கள்  தெரிவித்தனர்.

|  

Tags : snapchat snapchat app
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT