வணிகம்

வாட்ஸ்அப்பின் அசத்தலான புதிய வசதி அறிமுகம்

4th Aug 2021 06:00 PM

ADVERTISEMENT

பிரைவசி கொள்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக 'வியூ ஒன்ஸ்' வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனாளர்களின் பிரைவசியை பேணி காப்பதே தங்களின் முதல் இலக்கு எனக் கூறி வரும் வாட்ஸ்அப், அதற்கு ஏற்றார்போல் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 'போட்டோ, விடியோ யாருக்கு அனுப்பப்படுகிறதோ அதை ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையில் 'வியூ ஒன்ஸ்' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், பயனாளர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 'வியூ ஒன்ஸ்' வசதியை பயன்படுத்தி  போட்டோ, விடியோ அனுப்பினால் குறிப்பிட்ட நபர் அதை பார்த்தவுடன் அவர்களின் போனிலிருந்து அது நீக்கப்பட்டுவிடும்.

இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில், "போட்டோ மற்றும் விடியோ குறிப்பிட்ட நபர்களின் கேலரியில் சேகரிக்கப்படாது. ஒரு முறைக்கு மேல் அதனை பார்க்க முடியாது. இதுகுறித்து பயனாளர்களின் கருத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது. அனைத்து பயனாளர்களுக்கும் 'வியூ ஒன்ஸ்' வசதி இந்த வாரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.  
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT