வணிகம்

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்:லாபம் 327 கோடி

DIN

 முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்டு ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.326.80 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் தனிப்பட்ட முறையில் ரூ.2,467.01 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,113.65 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.430.93 கோடியிலிருந்து ரூ.326.80 கோடியாக குறைந்தது.

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனம் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.1,514.91 கோடியை ஈட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.9,519.62 கோடியாக இருந்தது.

2021 ஜூன் இறுதி நிலவரப்படி நிறுவனம் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு 7 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.75,763 கோடியைத் தொட்டுள்ளது. இந்த சொத்து மதிப்பு, 2020 ஜூன் 30-இல் ரூ.70,826 கோடியாக காணப்பட்டது.

மேலும், கடந்த ஜூன் இறுதியில் ரொக்க கையிருப்பு ரூ.7,917 கோடி உள்ளதையும் ஒட்டுமொத்த கையிருப்பாக ரூ.16,417 கோடி உள்ளது என சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT