வணிகம்

பேஸ்புக்கின் பதிவுகளை தரவிறக்கம் செய்யும் புதிய வசதி அறிமுகம்!

DIN

சமூக ஊடகமான பேஸ்புக்கில் உங்களது புகைப்படங்கள் அல்லது ஆவணங்களை பகிர புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி பயனர்கள் பேஸ்புக்கில் தாங்கள் பதிவிடும் புகைப்படங்கள் அல்லது பதிவுகளை கூகுள் டாகுமெண்ட்ஸ், பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ்.காம் ஆகியவற்றிற்கு நேரடியாக மாற்றலாம்.

பயனர்களின் வசதிக்காக அவர்கள் தாங்கள் பதிவிடும் முக்கியப் பதிவுகளை தரவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ள இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

மேலும், தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை மனதில் கொண்டு இந்த வசதியை நாங்கள் வடிவமைத்துள்ளோம். அவ்வாறு உங்கள் பதிவுகளை பகிரும்போது பாதுகாப்பு கருதி ஒருமுறை உங்களுடைய கடவுச் சொல்லை உள்ளிட்ட வேண்டும் என்று விளக்கம் தெரிவித்துள்ளது. 

இதற்காக நீங்கள் பேஸ்புக் பக்கத்தில் Settings & Privacy -> Settings->Your Facebook Information->Transfer Your Information என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

இதன்பின்னர் தனி விண்டோவில் கேட்கும் உங்களுடைய கடவுச் சொல்லை உள்ளிட்டால் உங்களுடைய பக்கத்தில் எதையெல்லாம் பகிர வேண்டும் என்று கேட்கும், அதில் புகைப்படங்கள், விடியோக்கள், பதிவுகள், குறிப்புக்கள் என்று ஆப்ஷன் இருக்கும். அதுபோன்று புகைப்படங்களில், விடியோக்களில் தேதி வாரியாக தேர்வு செய்து பகிரும் வசதி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT