வணிகம்

தில்லி: மின்னணு கார்களுக்கு சார்ஜிங் நிலையங்களின் தேவை அதிகரிப்பு

12th Apr 2021 05:04 PM

ADVERTISEMENT

தில்லியில் மின்னணு கார்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சார்ஜிங் நிலையங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த 45 நாள்களுக்குள் 130 சார்ஜிங் நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.

தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்னணு வாகனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

மின்னணு இருசக்கர வாகனங்கள், மின்னணு கார்கள், மின்னணு பேருந்துகளின் பயன்பாடு தில்லியில் அதிகரித்து வருகிறது. டாக்ஸி சேவைகளுக்கும் மின்னணு கார்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின்னணு கார்களுக்கு தேவையான சார்ஜிங் நிலையங்களின் தேவை தில்லியில் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2019-ம் ஆண்டு முதல் கார் சேவையை வழங்கிவரும் ப்ளூ ஸ்மார்ட் மொபிலிட்டி என்ற நிறுவனம் மின்னணு கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அன்மோல் சிங் ஜக்கி தெரிவித்ததாவது, ''பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், அடுத்த 45 நாள்களுக்குள் 130 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த நிலையங்களில் 25 முதல் 150 கார்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம். ஒவ்வொரு காரும் 90 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது'' என்று கூறினார்.

Tags : Electric vehicle Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT