வணிகம்

யமஹா இந்தியாவின் புதிய  ஃபாசினோ 125 சிசி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

DIN


சென்னை: யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தில் மென்மையாக பயணம் செய்யக்கூடிய வகையில் புதிய ஃபேசினோ 125 எஃப்.ஐ ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 4 வேரியண்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்நிறுவனம் இந்தியாவில் செயல்திறன் மிக்க பைக் தயாரிப்பு மட்டுமில்லாமல், ஸ்கூட்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஐப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம்,  இந்தியாவின் 125சிசி ஸ்கூட்டர் செக்மெண்டில், மென்மையாக  பயணம் செய்யக்கூடிய தனது முதல் மாடலான புதிய ஃபேசினோ 125 எஃப்.ஐ ஸ்கூட்டரை ஆரம்ப விலை ரூ. 66,430 தொடங்கி ரூ.69,930 வரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் ஃபேசினோ மாடல் 110 சிசி இழுவைத் திறனை மட்டுமே பெற்றுள்ளது. அதை மேம்படுத்தும் வகையில் 125 சிசி இழுவைத் திறனுடன் கூடிய மென்மையாக  பயணம் செய்யக்கூடிய வகையில் புதிய ஃபேசினோ ஸ்கூட்டர் மாடலை, யமஹா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது முந்தைய மாடலுக்கு பதிலாக இனிமேல் விற்பனைக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபேசினோ 16 சதவீதம் கூடுதலாக மைலேஜ் தரும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 58 கி.மீ மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், புதிய ஃபேசினோ 125-இல் அரசாங்கம் நிர்ணயித்த விதிமுறைகளைவிட பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு ஏற்ற ஆப்ன்ங் இர்ழ்ங் சிங்கிள் சிலிண்டர் ஃப்யூயெல் எஞ்சின் உள்ளது. இது 8.2 எச்பி பவர் மற்றும் 9.7 என்எம் பீக் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும் திறன் கொண்டது. இது 110 சிசி இழுவைத்திறனில் இருந்து 7.2 ஹெச்பி மற்றும் 8.1 என்எம் டார்க்கை மட்டுமே வழங்கும் ஒரு நல்ல பம்ப் அப் ஆகும்.

தற்போது சந்தையில் விற்பனையாகி வரும் ஃபேசினோ மாடலைக் காட்டிலும், 2020 ஃபேசினோ 125 ஸ்கூட்டர் 30 சதவீதம் கூடுதலான செயல்திறனை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், நகர்ப்புற பயன்பாட்டிற்கு தகுந்த வகையில் எஞ்சின் அமைதியாக ஸ்டார்ட் செய்யவும், வாகனம் இயங்கும் போது சத்தம் குறைவாக கேட்கும் வகையிலும், செயல்திறனை மேம்படுத்த உதவும் வகையில் புதிய ஸ்டார்ட் மோட்டர் ஜெனரேட்டர் மற்றும் ஸ்டாப்-ஸ்டார்ட் பொத்தானும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக வாகனம் டிராஃபிக் மோடில் இருக்கும் போது சிறப்பான பங்களிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பாரம்பரிய வடிவமைப்பு அம்சங்களை பெற்றுள்ள இந்த புதிய வகை ஸ்கூட்டரில், எடை குறைந்த அதேசமயத்தில் உறுதியான ஃபிரேம்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் முந்தைய மாடலைக் காட்டிலும் இந்த ஸ்கூட்டர் 4 கிலே எடை குறைந்து 99 கிலோ எடை கொண்டதாக உள்ளது.

யமஹா புதிய ஃபேசினோ 125 எஃப்.ஐ ஸ்கூட்டரில் அகலமான இருக்கைகள், மொத்தமாக 21 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் வசதி, பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் விதமான மல்டி ஃபங்ஷன் சாவி, வாகனத்தின் முன்பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 12 அங்குல அலாய் சக்கரங்கள், ஒருங்கிணைந்த பிரேக்கிங் தொழில்நுட்பம் கொண்ட சிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது.  யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சைட்-ஸ்டேண்ட் கட் ஆஃப் ஸ்விட்ச் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய யமஹா ஃபேசினோ 125 எஃப்.ஐ ஸ்கூட்டர் டார்க் மேட் ப்ளூ, சியன் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், சுவே காப்பர் ஆகிய 4 நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் காலங்களில் ல்டிஸ்க் பிரேக் வேரியண்ட்ஸ் விவிட் ரெட் மற்றும் யெல்லோ காக்டெயில் நிறங்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. 

யமஹா ஃபேசினோ 125 எஃப்.ஐ ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு டிரம் பிரேக், ஸ்டான்டர்டு டிஸ்க் பிரேக், டீலக்ஸ் டிரம் பிரேக், டீலக்ஸ் டிஸ்க் பிரேக் ஆகிய வகைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது. 

யமஹா பாசினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர் ரூ.66,430 முதல் தொடங்கி 69,930 ரூபாய் வரையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி,  ஸ்டான்டர்டு டிரம் பிரேக் மாடல் ரூ. 66,430-க்கும், ஸ்டான்டர்டு டிஸ்க் பிரேக் மாடல் ரூ. 68,930-க்கும்,  டீலக்ஸ் டிரம் பிரேக் மாடல் ரூ. 67,430-க்கும்,  டீலக்ஸ் டிஸ்க் பிரேக் மாடல் ரூ. 69,930 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் விற்பனை சந்தையில், ஹோண்டா ஆக்டிவா 125 க்கு சரிநிகர் போட்டியாக  புதிய யமஹா பாசினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர்  அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT