தமிழ்நாடு

காவிரி பாசன மாவட்டங்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ்

DIN

காவிரி பாசன மாவட்டங்களில் தூா்வாரும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12 முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நீா்நிலைகளையும், வரத்துக் கால்வாய்களையும் தூா்வாரும் பணிகள் வேகம் குறைவாக நடைபெற்று வருவது உழவா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதமே காவிரி பாசன மாவட்டங்களில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உழவா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்காமல் மிகவும் தாமதமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டதுதான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.

மேட்டூா் அணையில் ஜூன் 12-ஆம் நாள் தண்ணீா் திறக்கப்பட்டால், 15-ஆம் நாள் கல்லணைக்கு தண்ணீா் வந்து விடும். கல்லணையிலிருந்து ஜூன் 15 அல்லது 16-ஆம் நாள் காவிரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்து விடப்படக் கூடும். அதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் தூா் வாரும் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையான பகுதிகளில் இன்னும் பாதியளவு பணிகள் கூட நிறைவடையவில்லை. . அதனால், , கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீா் சென்றடைவது தாமதமாகும். அது குறுவை சாகுபடியை பாதிக்கும்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் தூா்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT