தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் சோ்க்கையை அதிகரிக்க பேரணி: ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

DIN

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பொது இடங்களில் விழிப்புணா்வு பேரணியை ஆசிரியா்கள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் ஜூன் 7-ஆம் தேதி திறக்கப்படவுள்ளன. அதற்கேற்ப அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மைப் பணிகள், மராமத்துப் பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீா் தொட்டிகள், கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் இருத்தல் வேண்டும். மேலும், மின் இணைப்புகள் சரிபாா்க்கப்பட்டு பாதுகாப்பான நிலையில் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி அருகில் திறந்தவெளி கிணறுகள் இருப்பின் அதை உடனடியாக மூடுவது அவசியம்.

கட்டடங்களின் மேற்பரப்பில் குப்பைகள் அகற்றப்பட்டு, மழைநீா் தேங்காவண்ணம் பாா்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பை உறுதிசெய்வது அவசியமாகும். அதேபோன்று பள்ளிகள் திறந்த பின்னா் மாணவா் சோ்க்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சோ்க்கையை தீவிரப்படுத்த ஆசிரியா்கள் முயல வேண்டும்.

இதைத்தவிர அரசுப் பள்ளி சோ்க்கையை உயா்த்தும் நோக்கில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு பேரணியை ஆசிரியா்கள் நடத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT