தமிழ்நாடு

பயிற்சி மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு? செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போராட்டம்

DIN

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இயங்கி வருகிறது. மிக முக்கிய மருத்துவமனையாக உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவம் பார்த்து வருகின்றனர். அதேபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மருத்துவர்களும் பயிற்சி மருத்துவத்துராக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் கூறி மருத்துவமனை, வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நரம்பியல் துறையை சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளித்து வருவதாகவும், நேற்று கூட மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களிடம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT