தமிழ்நாடு

சிஎஸ்கேவை வெற்றி பெறச் செய்தவர் பாஜக உறுப்பினர்: அண்ணாமலை

30th May 2023 01:25 PM

ADVERTISEMENT

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தது பாஜக உறுப்பினர் ரவீந்திர ஜடேஜா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 5-ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடித்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில்,

சென்னை அணியின் வெற்றிக்கான ரன்னை அடித்தது பாஜக உறுப்பினர். அவரது மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் ஜாம்நகர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ. அவர் ஒரு குஜராத்காரர். பாஜக உறுப்பினர் ஜடேஜாதான் சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடித் தந்தார்.

ADVERTISEMENT

சென்னை அணியில் ஒரு தமிழக வீரர்கூட விளையாடவில்லை. ஆனால், தோனிக்காக கொண்டாடுகிறோம். குஜராத் அணியில் அதிக ரன்களை எடுத்த சாய் சுதர்ஷன் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை தமிழக பாஜக டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளதால், ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது, தனது மனைவிக்கு ஆதரவாக ஜடேஜா வாக்கு சேகரித்ததும், சில நாள்களுக்கு முன்பு தில்லியில் பிரதமர் மோடியை ஜடேஜா சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT